பக்கம்:பொன் விலங்கு.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 413

சத்தியமூர்த்தி மோகினியின் இந்த வேண்டுகோளைக் கேட்டுச் சிரித்தான்.

"ஏன் சிரிக்கிறீர்கள்?"

'தன் கணவனிடம் வேண்டுகோள் விடுக்கிற மனைவியை நினைத்தால் சிரிப்பு வராமல் வேறென்ன செய்யும்?"

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது நர்ஸ் மோகினிக்காக ஒரு கிளாஸ் நிறையச் சாத்துக்குடிப் பழரஸத்தைப் பிழிந்துகொண்டு வந்து வைத்தாள். சத்தியமூர்த்தி நர்ஸ் வைத்த இடத்திலிருந்து அந்த கிளரலைத் தன் கையால் எடுத்துச் சிரித்துக்கொண்டே மோகினியிடம் நீட்டினான்.

"முதலில் நீங்கள் கொஞ்சம்...' என்று வெட்கத்தினால் சிவக்கும் முகத்தோடு அவனை வேண்டினாள் அவள். அந்தக் கிளாஸிலிருந்த சாத்துக்குடி ரஸத்தைச் சிறிது பருகிவிட்டுக் கிளாஸை அவளிடம் நீட்டினான் சத்தியமூர்த்தி. அந்த நேரத்தில் ஸ்கிரீன் மறைவுக்கு அப்பால் ஜமீன்தாரும் கண்ணாயிரமும் உட்கார்ந்திருந்த பகுதியில் குமரப்பனுக்கும் வேறு யாருக்குமோ பேச்சுத் தடித்து உரக்க குரல்கள் எழுந்து சண்டை போடுவதுபோல் ஒலிக்கவே என்னவென்று பார்ப்பதற்குச் சத்தியமூர்த்தியே வெளியில் எழுந்துவர வேண்டியதாயிற்று.

குமரப்பனும் ஜமீன்தாரும்தான் உரத்த குரலில் வாதாடிக் கொண்டிருந்தார்கள். கழன்று விழுந்து விடுகிறார்போல் இருந்த ஜமீன்தாரின் உருண்டை விழிகள் கோபத்தினால் சிவந்திருந்தன. மீசைதுடிதுடிக்க உரத்த குரலில் ஏதோகத்திக்கொண்டிருந்தார்.அவர். சண்டையைத் தடுக்கவும், வேடிக்கை பார்க்கவும், வார்டு வாசலில் டாக்டர்களும் நர்ஸுகளும், ஆஸ்பத்திரி வேலையாட்களுமாகக் கூட்டம் கூடத் தொடங்கியிருந்தது.

உங்கள் இஷ்டம்போல் ஆட்டிப் படைக்க இதுவும் குத்துவிளக்கு காரியாலயமில்லை! இது ஆஸ்பத்திரி என்பது நினைவிருக்கட்டும் ஜமீன்தார்வாள் குத்துவிளக்கு காரியாலயத்தில் வேண்டுமானால் உங்கள் மீசை ஆடும்போதே வேலையாட்களின் கைகால்களும் ஆடும்.இங்கே யாரும் உங்களுக்காக அப்படிநடுங்க மாட்டார்கள். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்..." என்று குமரப்பன் அவரை எதிர்த்துக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/415&oldid=595658" இலிருந்து மீள்விக்கப்பட்டது