பக்கம்:பொன் விலங்கு.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 415 'சற்றுமுன் வெளியே உங்கள் நண்பர் இரைந்து பேசியதெல்லாம் காதில் விழுந்தது. நான் என்ன செய்வேன்? எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என் அருகில் அதிக நேரம் இருக்க முடியவில்லையே என்பதை நினைத்தேன். அழுகை வந்து விட்டது. நான் பெரிய பாவி. என்னைச் சுற்றி ஒரே நரகமாக இருக்கிறது..."

"கவலைப்படாதே மோகினி அந்த நரகத்தினிடையே நீ மட்டும் ஒரு சொர்க்கமாக இருக்கிறாய். உன்னை மறுபடியும் நான் மாலையில் வந்து பார்க்கிறேன்."

'நீங்கள் மறுபடியும் வந்து பார்க்கப் போகிறீர்கள் என்ற ஞாபகத்திலேயே மாலை வரை கவலை இல்லாமல் கழிந்துவிடும். மாலையில் வரும்போது சிறிது நேரத்துக்கு முன் நீங்கள் கூறினீர்களே; அந்த வஸந்தசேனையையும் சாருதத்தனையும் பற்றி எனக்குச் சொல்ல வேண்டும்."

ஆகட்டும் என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான் சத்தியமூர்த்தி.

'இன்னொரு காரியமும் நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டும்."

"என்ன காரியமோ?" 'இன்று வெள்ளிக்கிழமை. கடந்த மூன்று வருஷங்களாக ஒரு வெள்ளிக்கிழமைகூடத் தவறாமல் மீனாட்சிக்கோவிலில் அர்ச்சனை செய்துகொண்டு வருகிறேன். இன்றைக்கும் அர்ச்சனை முறை நிற்காமல் நடந்து விடவேண்டும். சங்கீத விநாயகர் கோவில் தெருவில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் முன்பு அடிக்கடி உங்களிடம் அனுப்புவேனே அந்தப் பையன் இருப்பான். அவனைப் பார்த்து அவனிடம் ஒரு ரூபாய் பணம் கொடுத்து அர்ச்சனையை நடத்திவிடச் சொல்ல வேண்டும்." .

'அதற்கென்ன? கட்டாயம் சொல்லிவிடுகிறேன். என் கேள்வியைத் தப்பாக நினைத்துக் கொள்ளாவிட்டால் உன்னை ஒரு கேள்வி கேட்கலாமென்று நினைக்கிறேன்..." என்று சொல்லித் தயங்கினான் சத்தியமூர்த்தி, - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/417&oldid=595660" இலிருந்து மீள்விக்கப்பட்டது