பக்கம்:பொன் விலங்கு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பொன் விலங்கு

'ஒத்துப் போவதும் மற்றவர்களைத் தேவைக்கு அதிகமாக மன்னிப்பதும், பிறருடைய பலவீனங்களுக்கு அனுசரணையாக நம்முடைய பலங்களையும், திறமைகளையும் ஒடுக்கிக்கொள்வதுவும் சமூகத்தில் ஒரேவிதமான மனிதர்கள்தொடர்ந்துசெழிப்பாய்வாழவும், கொழுத்துத் திரியவும் துணை செய்யுமே அல்லாமல் எல்லாருடைய நன்மைகளையும் பாராட்டுவதற்குத் துணை செய்யாது" என்று இந்தச் சுபாவத்துக்காகத் தன்னைக் கடிந்துகொள்ள வரும் நண்பர்களிட மெல்லாம் எடுத்தெறிந்து பதில் சொல்லியிருக்கிறான் சத்தியமூர்த்தி. மாணவப் பருவத்திலிருந்தே படிப்படியாய் வளர்ந்திருந்த அஞ்சாமை யும்.துணிவும் எதிரே இருப்பவரைபாதிக்கும் என்பதற்காகவோ எதிரே இருப்பவருக்குத்தன்மேல்கோபம் வரும் என்பதற்காகவோஎதையும் பேசத் தயங்காத நாவன்மையை அவனுக்களித்திருந்தன. இதன் காரணமாகப் பலவீனங்களும், குறைபாடுகளும் உள்ள பலருக்கு நடுவேதான் இருப்பதே அவர்களுக்கு ஒரு பயமுறுத்தலாய், தன்னைப் பார்ப்பதே அவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு சட்டமாய் அவன் தோன்றியிருக்கிறான்.

இப்போதும் ஏதோ ஒரு விதத்தில் தனக்கு எதிரே இருக்கிற பூபதி அவர்களைத் தன்னுடைய வார்த்தைகள் பாதித்திருக்கின்றன என்பதை அவன் புரிந்துகொள்ள முடிந்தது. பெருந்தன்மையும் கொடைப் பண்பும் உள்ளவராகப் பலரால் புகழப்படும் இந்தக் கோடீஸ்வரரிடம் இப்படிப் பேசியிருக்க வேண்டாமோ என்று அவனுக்குச் சிறிது தயக்கமும் ஏற்பட்டது. அதே சமயத்தில் யாரையும் குறிப்பிட்டோஎவரோடும் சார்த்தியோசொல்லாமல் தான் பொதுவாகச் சொல்லிய ஓர் உண்மையைக் கேட்டு அவர் ஏன் அப்படிக் கூசித் தலைகுனிய வேண்டும் என்ற நுணுக்கமான சந்தேகமும் அவனுள் ஏற்பட்டது. அவர் இன்னும் தலை நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்கவில்லை. அந்த மெளனம் அவன் மனத்தை ஓரளவிற்கு வருத்தவும் செய்தது. அவசியம் இல்லாததாகவும் விரும்பத்தகாததாகவும் நிலவத் தொடங்கியிருந்த அந்த மெளனம் கலைவதற்குத் துணைசெய்தாள் அவருடைய மகள் பாரதி, அந்தச் சூழ்நிலையில் அங்கு நுழைவதற்குத் தயங்கியவாறே நுழைபவள்போல் மெல்ல நுழைந்து தந்தையின் சாய்வு நாற்காலி யருகே சென்று, "சாப்பாட்டுக்கு இலைபோட்டாயிற்று" என்றாள் அவள். தாம் மூழ்கியிருந்த உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டுத் தலைநிமிர்ந்த பூபதி எதுவும் நடக்காததுபோல் சத்தியமூர்த்தியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/42&oldid=595663" இலிருந்து மீள்விக்கப்பட்டது