பக்கம்:பொன் விலங்கு.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 421

சாய்ந்து கொண்டு நவநீத கவியின் 'சப்த சமுத்திரம்" என்ற புதிய கவிதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருந்தான், சத்தியமூர்த்தி. அந்தக் கவிதைத் தொகுதியில் பெண்களின் ஏழு பருவ வாழ்க்கையையும், ஏழு தனித் தனிச்சமுத்திரங்களாக உருவப்படுத்தி மிக அழகாகப் பாடியிருந்தார் நவநீத கவி. சந்தங்களினாலும், சப்த அழகினாலும்கூட இந்தப் பெயர் நூலுக்குப் பொருத்தமாக வரும்படி நவநீத கவி இரட்டை அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்திருந்தார். கூடத்தின் இன்னொரு பக்கம் அம்மாவும் தங்கைகளும் பல்லாங்குழியில் சோழி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந் தார்கள். அந்தச் சமயத்தில் அப்பா யாரும் எதிர்பாராத விதமாகக் கோபத்துடன், கண்ணாயிரத்துடனும் வீட்டின் உள்ளே நுழைந்தார்.

காலச் சுவரில் ஒவியமாய்-என்றும்

கரையா நினைவிற் காவியமாய் நீலக் கடலில் பேரலையாய்...மனம்

நீந்தித் திராப் பெருவெளியாய் என்று கண்பார்வையில் பட்டுக் கருத்தைக் கவர்ந்து கொண்டிருந்த 'சப்தசமுத்திர வரிகளில் அவன் ஈடுபட்டிருந்த போது "ஏண்டா நீ செய்யறதெல்லாம் உனக்கே நல்லாயிருக்கா...? கண்ணாயிரமும், ஜமீன்தாரும் ரொம்ப வருத்தப்பட்டாங்க' என்று அப்பா கூப்பாட்டுடன் ஆத்திரமாக வந்தார்.

37

- 米 - எப்போது பார்த்தாலும் பிறருக்கு உபதேசம் செய்து கொண்டே திரிய வேண்டும் என்ற துடிதுடிப்பு எவர்களிடம் குறைவாயிருக்கிறதோ அவர்கள்தான் உண்மையில் உபதேசம் செய்வதற்கே யோக்கியதை உள்ளவர்கள். -

$:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/423&oldid=595667" இலிருந்து மீள்விக்கப்பட்டது