பக்கம்:பொன் விலங்கு.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 42 3

சீரழிச்சுப்பிடுவே போலிருக்கே...? உங்க பையனா இருக்கக்கொண்டு எச்சரிக்கை செய்யறேன். இன்னிக்குக் காலையிலே ஆஸ்பத்திரியிலே என்னை அவமானப்படுத்தினதுக்கு வேறொருத்தனாயிருந்தா இதுக்குள்ளே நடக்கிறதே வேறே. ஆளை...உருப்படியா பார்த்துக்க மாட்டீங்க... கையைக் காலை முறிச்சுப்போட்டிருப்பேன்."அப்படீன்னு ஜமீன்தார்.சத்தம்போடற ாரு என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார் தந்தை. அதுவரை ஆத்திரப்படாமல் கேட்டுக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி, மெல்லத் தலை நிமிர்ந்து தந்தையை நோக்கி நிதானமாகப் பதில் சொல்லலானான்.

'ஜமீன்தாரை நாங்கள் ஏதோ அவமானப்படுத்தியதாக சொல்லுகிறீர்கள். ஆஸ்பத்திரியில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. ஜமீன்தார்தான் எங்களை அவமானப்படுத்தினார் என்று சொல்ல வேண்டும். அடிக்கடி நர்ஸைக் கூப்பிட்டு எங்களை வெளியே போகச் சொல்லிக் கொண்டிருந்தார்..." என்று அவன் கூறியதைக் கேட்டு மறுபடியும் சீறினார் தந்தை.

'அவர் அப்படிச் சொல்லியிருந்தால்தான் அதில் என்ன தப்பு? யாரோ கூத்தாடறவ கார்லே அடிபட்டு ஆஸ்பத்திரியிலே விழுந்து கிடந்தா அங்கே உனக்கென்னடா வேலை?" -

அதுவரை சத்தியமூர்த்தியோடு நேரில் பேசாமல் உட்கார்ந்திருந்த கண்ணாயிரம் திடீரென்று அவன் பக்கமாகத் திரும்பிச் சிகரெட் புகையை ஊதிக்கொண்டே குத்தலாகக் கேட்டார்.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! உங்களை ஒன்று கேட்கிறேன். நிறையத்தமிழ்நூல்கள் எல்லாம் படித்திருக்கிறீர்களே? எந்தத்தமிழ் நூலிலாவது தந்தையை எதிர்த்துப் பேசினால் புண்ணியம் உண்டு என்று சொல்லியிருக்கிறதா? அப்படிச்சொல்லியிருந்தால் இப்போது பேசியதைப்போல் இன்னும் தாராளமாக எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் உங்களுடைய தந்தையை எதிர்த்துப் பேசலாம்'-கண்ணாயிரத்தின் இந்தப் பேச்சைக்கேட்டுச் சத்தியமூர்த்திக்கு அடக்க இயலாத சினம் மூண்டுவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/425&oldid=595669" இலிருந்து மீள்விக்கப்பட்டது