பக்கம்:பொன் விலங்கு.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 பொன் விலங்கு

"மிஸ்டர் கண்ணாயிரம் துரதிர்ஷ்டவசமாக இப்போது நீங்கள் சொல்லியதையெல்லாம் மறுத்துப் பேச முடியாத நிலையிலிருக்கிறேன் நான். தங்கள் வாழ்நாள் முழுவதும் பாவங்களைத் தவிர வேறெதுவும் செய்தறியாதவர்கள் புண்ணியங்களைப் பற்றியும், தர்மங்களைப் பற்றியும் பிறரிடம் உபதேசம் செய்ய வரும்போதுதான் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. என் தந்தையும் நானும் உங்களிடம் பணத்துக்குக் கடன்பட்டிருக்கலாம். அப்படிக் கடன் பட்டிருப்பதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு எங்களுக்கே உபதேசம் செய்கிற தைரியம் உங்களுக்கு வந்துவிடக்கூடாது. எப்போது பார்த்தாலும் பிறருக்கு உபதேசம் செய்துகொண்டே திரிய வேண்டும் என்ற துடிதுடிப்பு எவர்களிடம் குறைவாயிருக்கிறதோ அவர்கள்தான் உண்மையில் உபதேசம் செய்வதற்கே யோக்கியதை உள்ளவர்கள். பணமும், அந்தஸ்தும், பதவியும் இருப்பதே உபதேசம் செய்வதற்கு போதுமான தகுதிகள் என்று உங்களைப் போலவே பலர் இன்றைய சமூகத்தில் தங்களுடைய தகுதியைப் பற்றிப் பிழையான நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று சத்தியமூர்த்தி கண்ணாயிரத்தைச் சாடிக் கொண்டிருந்தபோது அவன் தந்தை குறுக்கிட்டார்.

'டேய் பேசறதை நிறுத்து. எனக்குக் கெட்டகோபம் வரும். கண்ணாயிரம் என்னோட நான் கூப்பிட்டதனாலேதான் இந்த வீட்டுக்குள்ளார வந்திருக்காரு...அவரை மரியாதைக் குறைவாகப் பேசினியோ...என்னாலே பொறுத்துக்க முடியாது-உன்னைச் சொல்றதிலே குத்தமில்லையடா...எல்லாம் நீ பழகற ஆட்களாலே வந்த பேச்சு...அந்தக் குமரப்பனோடதானே நீநெருங்கிப் பழகறே...? அவனைப் போலவே நீயும் கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை இல்லாமப் பேசப் பழகிக்கிறே போலிருக்குது?" என்ற சீற்றத்தோடு தந்தை பேசத் தொடங்கியதும் உள்ளேயிருந்து தங்கை ஆண்டாள் ஓடி வந்து "அண்ணா! உன்னை அம்மா உள்ளே கூப்பிடுறாங்க" என்று சத்தியமூர்த்தியைக் கூப்பிட்டாள்.

"கூடத்தில் தந்தைக்கும் தனக்கும் இடையே பேச்சுத் தடித்துச் சண்டை வளருவதைத் தடுப்பதற்காக அம்மா செய்த தந்திரமான ஏற்பாடு இது என்பதைப் புரிந்து கொண்டவனாகச் சத்தியமூர்த்தி உட்புறம் எழுந்து சென்றபோது அவன் சிந்தனையில் போராட்டங்கள் நின்றந்திருந்தன. கண்ணாயிரம் பாவ புண்ணியத்தைப் பற்றிப் பேசியதைப் பொறுத்துக் கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/426&oldid=595670" இலிருந்து மீள்விக்கப்பட்டது