பக்கம்:பொன் விலங்கு.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 பொன் விலங்கு

நினைத்து நம்பி ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டியிருந்தது. காதலைக் கற்பித்தவர்களும் மனிதர்கள்தான். பல சமயங்களில் அதை அவமதிக்கிறவர்களும் மனிதர்களாகவேதான் இருக்கிறார்கள்.

தன்னுடைய மன அரங்களில் நித்தியமாக ஆடிக் கொண்டிருக்கிற பரிசுத்தவதி ஒருத்தியைப் பற்றிக் கூத்தாடறவகிட்ட உனக்கென்னடா பரிவு? என்று தன் தந்தையே தன்னிடம் கேட்க நேர்ந்துவிட்ட வேதனையை மறக்க முடியாமல் தவித்தான் சத்தியமூர்த்தி.

சிறிது நேரத்தில் மாடியில் சுற்றிப் பார்க்கப் போயிருந்த கண்ணாயிரமும் தந்தையும் படியிறங்கிக் கீழே வந்ததும் வராததுமாக, "உன்னிடம் ஒரு விஷயம் பேசணும் இப்படி வா" என்று தந்தை தன்னைத் தனியே அழைத்தபோது போவதா வேண்டாமா என்று சற்றே தயங்கியபின் தயக்கத்துடனேயே அவரோடு சென்றான் சத்தியமூர்த்தி. தந்தை அப்போது தனியே அழைத்துச் சென்று தன்னிடம் கூறியதைக் கேட்டபின் அவனுக்கு அடக்கமுடியாத சீற்றம் மூண்டது."ஒரு போதும் என்னால் அப்படிச் செய்ய முடியாது." என்று தன் தந்தையிடம் உறுதியாக மறுத்துக் கூறினான் அவன். மகனுடைய சீற்றத்தைக் கண்டு அப்போது தந்தையே மலைத்துப் போனார். மகன் தன்னை அத்தனை தீர்மானமாகவும் கடுமையாகவும் எதிர்ப்பது அதுவே முதல் தடவை என்பதைத் தயக்கத்தோடு நினைத்துப் பார்த்தார் அவர்.

k ஏழைகள் புதிது புதிதாகக் கவலைப் cյւ (Ջ4 செலவுக்குப் பணம்

தேடுகிறார்கள். பணக்காரர்களோ புதிது புதிதாக யோசித்துப் பணத்துக்குச் செலவு தேடுகிறார்கள்.

米 'வீணாகப் பெரிய மனிதர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது. சாயங் காலம் நானும் உன்கூட வருகிறேன். மேற்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/430&oldid=595675" இலிருந்து மீள்விக்கப்பட்டது