பக்கம்:பொன் விலங்கு.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 பொன் விலங்கு

சத்தியமூர்த்தி இப்படித் தன் தந்தையை எதிர்த்துப் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டுக் குமுறும் மனநிலையோடு இருந்தான். தந்தையும் அவனும் இப்படித் தனியே பிரிந்து வந்து வீட்டின் பின் கட்டில் விவாதித்துக் கொண்டிருந்தபோது கூடத்து ஊஞ்சலில் குமரப்பன் தனியே உட்கார்ந்திருந்தான். கண்ணாயிரம் சிகரெட் பிடித்தவாறு குறுக்கும் நெடுக்கும் உலாவிக் கொண்டிருந்தார். நண்பனைக் கூடத்தில் தனியே விட்டு விட்டு உள்ளே தந்தையிடம் அதிக நேரம் விவாதித்துக் கொண்டிருப்பதைச் சத்தியமூர்த்தி விரும்பவில்லை. அப்போது தந்தைக்கு அவன் கூறிய பதில் கண்டிப்பானதாயிருந்தது.

"ஜமீன்தாரிடம் அடிபணிவதோ, மன்னிப்புக் கேட்பதோ முடியாத காரியம். மனிதர்களுக்கும் அவர்களுடைய செல்வாக்குக்கும் பயப்பட்டு நடுங்கிய காலம் மலையேறி விட்டது. நியாயத்துக்கும் உண்மைக்குமே பயப்படவேண்டிய புதிய சுதந்திரத் தலைமுறையில் நாம் வாழ்கிறோம். ஜமீன்தாரையும் கண்ணாயிரத்தையும் நீங்கள் பெரிய மனிதர்களாக நினைக்கிறீர்கள் அப்பா! நானும், குமரப்பனும் எங்களைப்போல் புதிய சிந்தனை வளத்தை ஒப்புக் கொள்கிற இளைஞர்களும் அவர்களைச் சமுதாய விரோதிகளாக நினைக்கிறோம்!"

"இப்படிப் பேசினால் உருப்படாமல்தான் போகப் போகிறாய்; எக்கேடும்கெட்டுப்போ..ஆனால் ஒன்று. மறுபடியும் எப்போதாவது அந்த நாட்டியக்காரியைத் தேடிக்கொண்டு போகாதே...அவர்கள் பரம்பரை பரம்பரையா ஜமீன்குடும்பத்துக்குத்தான் பழக்கம்... குடியிருக்கிற வீடு, வாசல்சொத்துசுகம் எல்லாம் ஜமீன்தார்செலவிலே அநுபவிக்கிறவங்கவேறே எப்படியிருக்க முடியும்? ஜமீன்தார் சின்ன வயசிலே தாரமிழந்தவரு. அந்த இடத்திலே இந்தப் பெண்ணை வைத்துக் கொள்ளலாம் என்கிற அபிப்பிராயம் அவருக்கு இருக்கும்போலத் தோன்றுகிறது. முத்தழகம்மா மகளும் மகா செளந்திரியவதியா இருக்கா.அதனாலேஜமீன்தார்முழு மனத்தையும் அவளிடம் பறிகொடுத்திருக்கிறார். அந்தப் பெண்ணை வைத்துச் சினிமா படம்கூடப் பிடிக்கப் போகிறாராம். அப்புறம் இன்னும் எங்கேயோ பெரிய நாட்டிய கலாகேந்திரம்னு பரத நாட்டியத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/432&oldid=595677" இலிருந்து மீள்விக்கப்பட்டது