பக்கம்:பொன் விலங்கு.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 435 நண்பர்கள்.டிக்கட்வாங்கிக்கொண்டு நிலையத்திற்குள் சென்ற பிறகும் இரயில் வந்து புறப்படுவதற்கு இன்னும் அரைமணி நேரத்துக்கும் மேல் மீதமிருந்தது. பிளாட்பாரத்தில் கூட்டமில்லாத பகுதிக்குச் சென்று நண்பர்கள் இரயில் வருகிறவரை பேசிக் கொண்டிருந்தார்கள். தந்தைக்கும் தனக்கும் இடையே நடந்த கடுமையானவிவாதங்களைப் பற்றி நண்பனிடம் சொல்லத் தொடங்கினான் சத்தியமூர்த்தி: - 'கண்ணாயிரமும், ஜமீன்தாரும் அப்பாவை நன்றாக முடுக்கி விட்டிருக்கிறார்கள்.அப்பாஎன்னிடம் வந்துசீறுகிறார்.மோகினியைப் போன்றவர்களுடைய வீடு, வாசல்,உணவு,உடையெல்லாம்ஜமீன்தார் அவர்களுக்காக அளித்துக் கிடைக்கும் உதவிகளாம். அவளுடைய அழகும் கலைத்திறனும் ஜமீன்தாருக்கு உரியவைகளாம். அவளைப் பார்க்கப் போவதோ அவள்மேல் அநுதாபப்படுவதோ ஜமீன்தாரின் கோபத்தைக் கிளர்ந்தெழச்செய்யுமாம். அவளை மறந்துவிடு வீணாக ஜமீன்தாரின் கோபத்துக்கு ஆளாகிச் சீரழியாதே' என்று அப்பா என்னை எச்சரிக்கிறார். நானோ என் இதயத்தில் இருந்து ஒருகாலும் பிரிக்கவும், விலக்கவும் முடியாத பாசத்தை அவள் மேல் வைத்துவிட்டேன். "ஐ கேன் டை வித் ஹெர் - பட் நாட் லிவ் வித்அவுட் ஹெர் (நான் அவளோடு சாகவும் முடியும் - ஆனால் அவளின்றி வாழ்வது முடியாத காரியம்) என்று ஜான் டிரைடன்' பாடியிருக்கிறானே அப்படி இருக்கிறேன் நான். அவளுடைய தவிப்பும் வேதனையுமோ என்னைவிட அதிகம். ஜமீன்தார் சின்ன வயதில் தாரமிழந்தவராம். எனவே மோகினியை இழந்துபோன அந்த இடத்தில் வைத்து அவளுடைய அழகுக்கும் கலைத்திறனுக்கும் சொந்தம் கொண்டாட ஆசைப்படுகிறாராம்."

சிறிது நேரம் ஒரு பதிலும் சொல்லாமல் சத்தியமூர்த்தி கூறியதை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்த குமரப்பன் நீண்ட பெருமூச்சு விட்டுப் பின் பேசலானான்.

"உன் நிலைமை புரிகிறது சத்தியம் முழுவதும் புரியவில்லை யானாலும் உங்கள் வீட்டு ஊஞ்சல் பலகையில் நான் உட்கார்ந்திருக்கும்போதே ஏதோ பெரும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது என்று ஜாடைமாடையாகப் புரிந்தது. உன்னைக்கூட அங்கேயே இதைப்பற்றிநான் நடுவில் ஒருமுறைகேட்டேன்.நீஏதோ சிந்தனையில் என் கேள்வியைக் கவனிக்காமல் இருந்துவிட்டாய். இரண்டு மூன்று நாட்களாக நான் ஓர் ஆச்சரியகரமான விஷயத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/437&oldid=595682" இலிருந்து மீள்விக்கப்பட்டது