பக்கம்:பொன் விலங்கு.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 பொன் விலங்கு

அமர்த்தப்பட்டிருந்த ஓர் இளம் சட்டைக்காரப் பெண்மணியின் முன்னால் நிறுத்தினான். விளக்கு வெளிச்சத்தில் தேவலோகமாகத் தெரிந்தது அந்த மாளிகை. புல்வெளியிலும் தோட்டத்திலும்கூட இருளுக்கு இடமே இல்லாதபடி மின்சார விளக்கொளி வெள்ளமாகப் பரவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்புறம் சிறிதும், பெரிதுமாகப் பலகார்கள் நின்றன. அங்குசெய்யப்பட்டிருந்த ஆடம்பரச்செலவைப் பார்க்கும்போது, 'ஏழைகள் புதிது புதிதாக்க் கவலைப்பட்டுச் செலவுக்குப் பணம் தேடுகிறார்கள். பணக்காரர்களோ புதிது புதிதாக யோசித்துப் பணத்துக்குச் செலவு தேடுகிறார்கள்" என்று குமரப்பன் அடிக்கடி சொல்கிற வாக்கியம் நினைவுக்கு வந்தது. "ஹலம் டு யூ வாண்ட் டு n" (நீங்கள் யாரைப் பார்க்க வேண்டும்?) என்று கடுகடுப்பாகக் கேட்டாள் அந்த ஆங்கிலோ இந்தியப் பெண்மணி. சத்தியமூர்த்திபூபதியின்கடிதத்தைஎடுத்துநீட்டினான்.அதைவாங்கிப் பார்த்து விட்டு அவனை உள்ளே அழைத்துச் சென்றாள் அவள். ஒரு சமயம் அரண்மனையைப் போல் தோன்றிய அந்த மாளிகையே இன்னொரு சமயம் ஒரு பெரிய நைட்கிளப் போலவும் ஹோட்டல் போலவும் தோன்றிச் சத்தியமூர்த்தியை மருட்டியது. உட்புறம் போய் ஹாலில் பார்த்த போதுதான் அவன் சிறிதும் விரும்பாத அல்லது எதிர்பாராத ஓர் உண்மை திடீரென்று புரிந்தது. ஹாலில் மஞ்சள்பட்டி ஜமீன்தாரும், கண்ணாயிரமும் பூபதியோடு சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஹாலில் பாரதியின் தலை தெரிந்தது. மதுரையில் உள்ள மஞ்சள்பட்டியாரின் பங்களா அதுதான் என்பதும், அங்கேதான் பூபதி வந்து தங்கியிருக்கிறார் என்பதும் மிக்க கசப்பான உண்மைகளாக அந்தக் கணத்தில் அவனுக்குத் தெரியவந்தன.

39

- :};

தாங்களே தங்களுடைய மனச் சாட்சிக்காக நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதைவிடத் தங்களைப் பிறரிடம் நல்லவர்களாக நிரூபித்துக் கொண்டால் போதும் என்ற ஆசைதான் இன்று மிகப் பலரிடம் இருக்கிறது.

k
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/440&oldid=595686" இலிருந்து மீள்விக்கப்பட்டது