பக்கம்:பொன் விலங்கு.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 பொன் விலங்கு

பொதுவாக அவளை நலம் விசாரித்து வைத்தான். தந்தை அமர்ந்திருந்த நாற்காலியின் பின்புறத்தை கைகளால் பற்றியபடி அவளும் அங்கேயே நின்றுகொண்டாள். சிகரெட் டின் எடுத்துக் கொடுப்பதற்கும் ஒவல் டின் கொண்டுவந்து கரைத்துக் கொடுப்பதற்குமாக உள்ளே எடுபிடி வேலையாள்போல் அலைந்து கொண்டிருக்கிறவர் தன்னுடைய தந்தைதான் என்பது பாரதிக்கோ, பூபதிக்கோ தெரிந்திருக்கலாமோ என்ற தவிப்பினால் பொறுமையும் மலர்ச்சியும் இழந்து ஏதோ பொம்மைபோல் ஒரு முறைக்காக அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அப்போது தன்னுடைய கம்பீரமான உருவம் கூனிக் குறுகிவிட்டதுபோல் அவனுக்கே ஒரு பிரமை உண்டாகியிருந்தது. தன்னைத் தர்மசங்கடமான நிலைமைக்கு ஆளாக்கிவிட்ட தந்தைமேல் கோபம் கோபமாக வந்தது அவனுக்கு தந்தையை அந்த அளவு துணியச் செய்து விட்ட தன் வீட்டு வறுமையின் மேலும் கோபம் வந்தது. இறுதியாகப் படைப்பின் மேலும் கடவுளின் மேலுமே கோபம் வந்து குமுறியது. ஒருவேளை கண்ணாயிரமோ, ஜமீன்தாரோ தன்னை அவமானப்படுத்த வேண்டுமென்றே அந்த உண்மையைப் பூபதியிடமும், பாரதியிடமும் சொல்லியிருந்தும் அவர்கள் தன்னிடம் அதைத் தெரிந்து கொள்ளாதது போல நடிக்கிறார்களோ என்ற சந்தேகமும் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. சில இடங்களில் சில மனிதர்களோடு சேர்ந்து இருந்தாலே எதற்கோ அடிமைப்பட்டு விட்டதுபோல் அந்தரங்கமாக ஒரு தவிப்பும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும். அத்தகைய தவிப்புக்கும் குமுறலுக்கும் இப்போது ஆளாகியிருந்தான் சத்தியமூர்த்தி. -

"உங்கள் ஆசிரியரைப் பார்த்தாயா அம்மா? ஜமீன்தாரைப் பற்றிச்சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். பாதியிலேயே கேட்பதற்கு பொறுமை இழந்துவிட்டார்...' என்று பின்புறம் நின்றிருந்த மகளிடம் சொல்கிறாற்போலச் சொல்லிக்கொண்டே சத்தியமூர்த்தியை நோக்கிக் குத்தலாகப் பேசினார் பூபதி, சத்தியமூர்த்தியும் அவரை நோக்கி மெளனமாகப் புன்னகை புரிந்தான். இல்லை, புன்னகை புரிவதாக நடித்தான். அந்தப் புன்னகையும் மனப்பூர்வமாக வரவில்லை. அதே வேளையில் 'சமூகத்தில் உள்ள பலர் அவர்களிடம் இருக்கும் நியாயமான தகுதிகளுக்காகக் கூடப் புகழப்படுவதில்லை. வேறு சிலரோடு அவர்களிடம் இல்லாத தகுதிகளுக்காகவும் சேர்த்துப் புகழப்படுகிறார்கள் என்று அவன் மன்ம் நினைத்துக் குமுறிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/446&oldid=595692" இலிருந்து மீள்விக்கப்பட்டது