பக்கம்:பொன் விலங்கு.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 பொன் விலங்கு

குமுறுகிறது. என் தோள்களில் பல்லாயிரம் தீமைகளைச் சாடி நொறுக்கும் அவ்வளவு பெருந்துணிவு தினவெடுத்துப் பொங்குகிறது" என்று இவ்வாறு சிந்தித்தபடி வீற்றிருந்த சத்தியமூர்த்தியைப் பூபதி வினவினார்.

"ஏன் இங்கு வந்ததிலிருந்து நீங்கள் என்னவோ போலிருக் கிறீர்கள்? உங்களுக்கு உடம்பு சரியில்லையா.போய் ஒய்வெடுத்துக் கொண்டு நாளை மாலை விமான நிலையத்துக்கு வாருங்கள். நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும். ஸ்தாபகர்தினவிழா நன்றாக நடைபெற்றால் அந்தப் பெருமை எல்லாம் உங்களுக்குத்தானே?"

சத்தியமூர்த்தியும் அங்கிருந்து புறப்படத்துடித்துக்கொண்டுதான் இருந்தான். பூபதி இப்படி வினாவியதையே ஒரு காரணமாக வைத்து அவரிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து உடனே புறப்பட்டு

விட்டான் அவன்

40

米 ஒரு பெண்ணின் அதிகப் பேச்சுக்கு சில சமயங்களில் ஓர் அர்த்தமும் இல்லாமல் போகலாம். ஆனால் ஒரு பெண்ணின் அதிக மெளனத்துக்கு மட்டும் எத்தனையோ பல அர்த்தங்கள் உண்டு.

- 米 மஞ்சள்பட்டியாரின் மாளிகை எல்லையில் மறுபடியும் தன் தந்தையை அந்த அவலமான நிலையில் தான் சந்திக்க நேரிடும் முன்பே அங்கிருந்து புறப்பட்டு வெளியேறிவிட வேண்டுமென்றுதான் சத்தியமூர்த்தி அவ்வளவு அவசரமாகப் புறப்பட்டிருந்தான். அவனுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டுப் பூபதியும், அவர் மகள் பாரதியும்கூடத் தோட்டத்தில் ஜமீன்தார், கண்ணாயிரம் ஆகியவர்களோடு அமர்ந்துகொண்டார்கள். ஜமீன்தாரும், கண்ணாயிரமும், பூபதியும், பாரதியும் தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த பகுதியிலிருந்து அரட்டைப் பேச்சுகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/450&oldid=595697" இலிருந்து மீள்விக்கப்பட்டது