பக்கம்:பொன் விலங்கு.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 453

எப்படி ஆரம்பித்தால் மோகினியின் மனம் புண்படாமல் இருக்கும்? என்று எண்ணி 'மிருக்கடிகம் காவியத்தை அவளுக்கு மிக மிக நாகுக்காகச் சொல்லி முடிப்பதற்குச் சீரான கதை. உருவத்தைத் தன் மனத்தில் முதலில் அமைத்துக் கொள்ள முயன்றான் அவன். வஸந்தசேனை ஓர் இளம் கணிகை என்று தொடங்கினால் நல்லதா? அல்லது ஒர் இளம் தாசி என்று தொடங்கினால் நல்லதா? எப்படிச் சொன்னால் மோகினி தன்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாமலிருப்பாள் என்று நினைத்து நினைத்துத் தயங்கியபின் முதல் வாக்கியத்தைச் சொல்லி முடித்த சுவடு நீங்குவதற்குள்ளாகவே ஆனால் அவள் செய்த காதல், புனிதமும் பரிசுத்தமும் நிறைந்தது என அடுத்த வாக்கியத்தையும் உடனே சேர்த்துச்சொல்லி விடுவதென்று முடிவு செய்துகொண்டான் அவன். தன்னுடைய வாழ்க்கைக்கும் வலந்தசேனை-சாருதத்தன் கதைக்கும் ஏதோ ஒர் ஒற்றுமை இருப்பதனால்தான் முன் தினம் பேசிக் கொண்டிருந்தபோது சத்தியமூர்த்தி அவளுடைய அதைப்பற்றித் தன்னிடம் குறிப்பிட்டிருக்க வேண்டுமென்று மோகினி நினைத்ததனால் அந்தக் கதையைப் பற்றிய ஆவலைத் தன் மனத்தினுள் தானாகவே வளர்த்துக் கொண்டிருந்தாள் அவள். சத்தியமூர்த்தியும் அவளுடைய ஆவலைப் புரிந்து கொண்டிருந்தான். அவளுடைய மனத்தில் வேற்றுமையாக எதுவும் தோன்றாதபடி வஸந்தசேனை-சாருதத்தன் கதையை அவளுக்கு நாசூக்காகவும் மென்மையாகவும் வளர்த்துச் சொல்லத் தொடங்கிவிட்டான் அவன். -

வஸந்தசேனையின் எழில் கொஞ்சும் இளமைப் பருவத்தைப் பற்றியும், உச்சயினி.நகரத்தின் அரண்மனையையும் விடப் பெரிய அவளது செல்வமாளிகையைப் பற்றியும் சாருதத்தனிடம் அவளுக்கு ஏற்பட்டிருந்த பரிசுத்தமான காதல் பிடிவாதத்தைப் பற்றியும் ஒருவிதமாகச் சொல்லி முடித்தாகிவிட்டது, சாருதத்தனுடைய குணநலன்களைப் பற்றியும், பிறருக்குக் கொடுத்துக் கொடுத்து அந்தக் கொடையின் மிகுதியினாலேயே அவன் ஏழையாகி விட்டதைப் பற்றியும், இப்போது சத்தியமூர்த்தி அவளுக்குச் சொல்லத் தொடங்கியிருந்தான்.

"ஆண்மகனின் அழகும், அந்த அழகுக்குத் துணையான ஒரு சிறந்த குணமும் சேர்ந்துதான் பேரழகியான ஒரு பெண்ணை நிரந்தரமாகக் கவர முடியுமே தவிரத் தனி உடலழகு மட்டுமே ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/455&oldid=595702" இலிருந்து மீள்விக்கப்பட்டது