பக்கம்:பொன் விலங்கு.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 பொன் விலங்கு

பெண்ணை நிரந்தரமாகக் கவர்ந்துவிட முடியாது. சாருதத்தன் இணையற்ற ஆணழகன். அழியக்கூடிய இந்த அழகைத் தவிர வந்தவர்க்கெல்லாம் தன்னிடமிருந்த செல்வத்தை வரையாது கொடுத்துக் கொடுத்து அந்தக் கொடைப் பெருமிதத்தினாலே அழியாத குண அழகையும் பெற்றிருந்தான் அவன். கொடுத்துக் கொடுத்துத் தான் ஏழையாகிவிட்டதற்காக வருத்தப்படாமல் தன்னைத் தேடி வருபவர்களுக்குக் கொடுக்கத் தன்னிடம் இனி ஒன்றும் மீதமில்லையே என வருந்திக் கொண்டிருந்தான் சாருதத்தன். அவனுக்குத் திருமணமாகி இல்லற வாழ்வில் ஓர் ஆண்மகவு இருந்தும்கூட இளம் கணிகையான வஸந்தசேனை அவனையே தன் நாயகனாகப் பாவித்து அவனுக்கு ஆட்பட்டு உருகிக் கொண்டிருந்தாள். சாருதத்தன் ஏழையாயிருக்கிற அதே உலகத்தில் தான் செல்வத்தோடிருப்பதற்கே வெட்கமாக இருந்தது அவளுக்கு.

'கொடியை வளைத்துப் பூப்பறிக்க நேர்ந்தால் கூடக் கொடிக்கு நோகுமாமே என்று தயங்கிப் பூக்களைக் கொடியிலிருந்து பறிக்கவும் விரும்பாத அளவு மென்மையான மனம் படைத்த சாருதத்தன் இப்போது வறுமையால் எப்படி எப்படி வாடியிருப்பானோ என்று எண்ணும்போதெல்லாம் வஸந்தசேனை கண்கலங்கித் தவித்தாள். உச்சயினி நகரத்துக் காமன் கோவிலில் முதன் முதலாகச் சாருதத்தனைச் சந்தித்து அவனிடம் தன் மனத்தைப் பறிகொடுத்த முதல் விநாடியிலிருந்து அவள் அவனுக்கு மானசீகமாக வாழ்க்கைப்பட்டிருந்தாள். சாருதத்தன் உலகத்துக்கு முன், பரம ஏழையாக இருந்தாலும் வஸந்தசேனையின் இதயத்தில் அவன் ஒருவனே உலகத்தின் மிகப்பெரிய செல்வனாகக் கொலு வீற்றிருந்தான். அவளுடைய வீதியிலேயே அவளுக்கு அருகே இருந்த வீடுகளிலுள்ள பல இளம் கணிகைகள் தங்கள் அழகை முதலாக வைத்து வாணிகம் செய்து பெரும் பொருள் குவித்துக்கொண்டிருந்த அதே வேளையில், அவள் சாருதத்தனை நினைத்து உருகிக்கொண்டிருந்தாள். உச்சயினி நகரத்தின் செல்வச் சிறப்பு மிக்க ஆடவர்கள் அவளுடைய தெருவைத் தேடி வருகிற மாலை வேளைகளில் அவள் தெய்வத்தைச் சந்திக்கப்போகும் பரம பக்தையாகச் சாருதத்தனுடைய தெருவைத் தேடி அலைந்து நடந்து கொண்டிருந்தாள். அப்படிச் சென்று கொண்டிருந்த மாலை வேள்ை ஒன்றில் அப்போது உச்சியினியை ஆண்டு கொண்டிருந்த பாலகன் என்ற கொடுங்கோலரசனுக்கு ஆசைக்கிழத்தி ஒருத்தியிடம் பிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/456&oldid=595703" இலிருந்து மீள்விக்கப்பட்டது