பக்கம்:பொன் விலங்கு.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி . 457

அவன் அதிகமாகக் கவலைப்படவில்லை. கண்ணாயிரமும், ஜமீன்தாரும், சத்தியமூர்த்தி இருந்த பக்கம் திரும்பிப் பார்க்கவும் இல்லை; அவனை இலட்சியம் செய்யவும் இல்லை. பூபதியும் கூட அவ்வளவாகச் சுமுகமான நிலையில் அந்தச் சந்திப்பை ஏற்றுக்கொண்டதாகச் சத்தியமூர்த்திக்குத் தெரியவில்லை. பாரதியோ அவனிடம் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக, "இதில் அப்பாவைப் பற்றி வந்திருக்கிறது. பார்த்தீர்களா?" என்று தன் கையில் வைத்துக் கொண்டிருந்த புதிய குத்துவிளக்கு இதழைச் சத்தியமூர்த்தியிடம் நீட்டினாள். அதை வாங்கிச் சிறிது நேரம் புரட்டிப் பார்த்துவிட்டு அவளிடமே திருப்பிக் கொடுத்துவிட்டான் அவன். .

"நீங்கள் எங்கே...இப்படி...இங்கே?' என்று அவளுடைய தந்தை வினாவினாற் போலவே அவளும் அவனை வினாவ நினைத்திருக்கலாம். ஆனால், நினைத்ததைக் கேட்காமல் அவள் அமுத்தலாகவே இருந்துவிட்டாள். ஒரு பெண்ணின் அதிகப் பேச்சுக்குச் சில சமயங்களில் ஓர் அர்த்தமும் இல்லாமல் போகலாம். ஆனால் ஒரு பெண்ணின் அதிக மெளனத்துக்கு எத்தனையோ பல அர்த்தங்கள் உண்டு. இந்த விதத்தில் பார்த்தால் ஒரு பெண்ணின் பேச்சை விடப் பேசாமை பயங்கரமானது பாரதி மெளனமும் அப்போது அப்படிப்பட்டதாகத்தான் இருந்தது. பூபதியிடம் ஒருவிதமாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து மெல்லக் கிளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தான் சத்தியமூர்த்தி. பகலில் மீதமிருந்த பரீட்சை விடைத்தாள்களைத் திருத்த முடியாமல் முக்கியமான நாலைந்து நண்பர்கள் அவனைத் தேடி வந்துவிட்டார்கள். அவர்கள் அவனிடம் விடைபெற்றுக்கொண்டு போவதற்குள் மாலை நேரமாகிவிட்டது. மாலையில் அவன் பூபதியை வழியனுப்ப விமான நிலையத்துக்குப் போக வேண்டியிருந்தது. ஜமீன்தார் சார்பில் கண்ணாயிரம் மட்டும் விமான நிலையத்துக்கு வழியனுப்ப வந்திருந்தார். பூபதிக்குப் பெரிய ரோஜாப்பூ மாலையைப் போட்டு வழியனுப்பினார் கண்ணாயிரம். புறப்படுவதற்கு முன்னும் பூபதி, தாம் திரும்பியவுடன் நடைபெற வேண்டிய ஸ்தாபகர் தின விழாவைப் பற்றியும், அதற்கு வருகிற மந்திரிக்குக் கொடுக்க வேண்டிய வரவேற்பைப் பற்றியுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/459&oldid=595706" இலிருந்து மீள்விக்கப்பட்டது