பக்கம்:பொன் விலங்கு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பொன் விலங்கு

"மழையாக இருக்கிறதே? ஐந்து நிமிஷம் பொறுத்துப் போகலாம். நான் உங்களைக் கொண்டு போய்விட ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறியபடி உள்பக்கமாகத் திரும்பினார். அவருடைய மகள் பாரதி தன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு தந்தையிடம் கொடுப்பதற்காக நீலமும் சிகப்புமாக ஏதோ மாத்திரைகள் அடங்கிய மருந்துப் பாட்டில்களோடு அப்போதுதான் அந்த அறைக்குள் வந்து கொண்டிருந்தாள்.

'டிரைவர் யாராவது இருக்கிறானா பார் அம்மா' என்று மகளை நோக்கிக் கூறினார் அவர்.

கையோடு கொண்டு வந்திருந்த மருந்துப் பாட்டில்களை மேஜையின்மேல் வைத்துவிட்டு, "இதோ பார்க்கிறேன் அப்பா' என்று விரைவாக முன் வராந்தாவுக்குச் சென்றாள் அவள்.

சிறிது நேரம் கழித்து, 'டிரைவர் யாரையும் காணவில்லை அப்பா!' என்ற பதிலோடு வந்து தயங்கி நின்றாள் அந்தப் பெண். இதற்குள் மழை பேரோசையிட்டு வலுத்திருந்தது. 'மழையா யிருக்கிறது. இவரைக் கல்லூரியில் கொண்டு போய் விட்டுவிட்டு வரவேண்டும்..." என்று பேச்சைத் தயக்கத்தோடு இழுத்து நிறுத்தினார் - الأيِّل المي

தனக்காக அவர்கள் சிரமப்படுவதை விரும்பாத சத்தியமூர்த்தி, "பரவாயில்லை. ஒரு குடையிருந்தால் போதும், நான் போய்க் கொள்வேன்' என்றான். -

“நானே கொண்டுப்ோய் விட்டுவிட்டு வருகிறேனே..." என்ற வார்த்தைகள் பாரதியின் உதடுவரை வந்து வெளியே ஒலிக்கத் தயங்கிக் கொண்டிருந்தன. அந்தத் தயக்கத்தோடு தந்தையின் முகத்தைப் பார்த்தாள் அவள். தந்தையாக முந்திக்கொண்டு அந்தக் கட்டளையைத் தனக்கு இடமாட்டாரா என்று தவித்தது அவள் மனம். தானே அதைச் சொல்லிவிடலாம் போலப் பரபரப்பாயிருந்தாலும் அப்படிச்சொல்ல விடாமல் அந்த வேளையில் வெட்கமும், பயமும் வந்து அவளைத் தடுத்தன. - . . ;

கையில் சூட்கேலையும் எடுத்துக்கொண்டு இந்த மழையில் இவரால் எப்படிக்குடையில் போக முடியும்?' என்று அந்தரங்கமாகக் கவலைப்பட்டாள் அவள். நாலைந்து நிமிடம் மகளைத் தவிக்கச் செய்த பின் அந்தக் கேள்வியை மெல்ல அவளிடமே கேட்டார் பூபதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/46&oldid=595707" இலிருந்து மீள்விக்கப்பட்டது