பக்கம்:பொன் விலங்கு.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 பொன் விலங்கு

அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி மனத்திலோ முகத்திலோ மலர்ச்சியின்றிக் கேட்டுக் கொண்டிருந்தான். தந்தைக்குப் போடப்பட்ட மாலைகளைக் கையில் சுமந்து எங்கோ பார்த்தபடி நின்றிருந்தாள் பாரதி. நகரிலிருந்து வெகு தொலைவு தள்ளியிருந்தும் விமான நிலையத்துக்குப் பூபதியின் நண்பர்களும் பிரமுகர்களுமாகப் பலர் வழியனுப்ப வந்திருந்தார்கள். "நானும் அப்பாகூடப் போகலாம் என்றிருந்தேன். திடீரென்று காலையில் ஜமீன்தார் மாமா வேண்டாம் என்றார். 'டிக்கெட்டை கான்சல் செய்துவிட்டேன். அப்பா டில்லியிலிருந்து வருகிறவரை ஜமீன்தார் மாமாவுடன் மதுரையில்தான் இருக்கப் போகிறேன்' என்று பாரதி யாரிடமோ வந்திருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் சத்தியமூர்த்திக்கு அவள் தந்தையோடு டில்லிக்குப் போகவில்லை என்று தெரியும்.

உரிய வேளையில் பிரயாணிகளை விமானத்தில் ஏறிக் கொள்ளச் சொல்லி வேண்டுகிற அறிவிப்பும் ஒலித்தது. பூபதி எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு விமானப் படிக்கட்டை நோக்கி நடந்தார். "என்னம்மா? கடைசிப்படி ஏறுவதற்குள் மறுபடி நானும் டில்லிக்கு வருவேன்' என்று மாறிவிடமாட்டாயே; நிச்சயமாக நீ வரவில்லைதானே?" என்று இறுதியாக மகளிடம் வேடிக்கையாகக் கேட்டுவிட்டு நடந்தார் அவர். -

ఢఙ s - /్యప్తో &o

sk தெய்வ நம்பிக்கை இல்லாதவர் களை விடப் பெரிய நாஸ்திகர்கள் மனிதப் பண்பிலும், ஒழுக்கத்திலும் நம்பிக்கை இல்லாதவர்கள்தான். -

- - - 米 பூபதி எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லிவிட்டுப் போயிருந்தும் விமான நிலையத்திலிருந்து திரும்பும்போது சத்தியமூர்த்தி கண்ணாயிரத்தோடு அவர் கொண்டு வந்திருந்த ஜமீன்தாரின் காடிலாக் காரில் திரும்பவில்லை. சற்று முன் அதே விமானநிலையத்தின் கூட்டத்தில்வழியனுப்பவந்திருந்தவ்ர்களோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/460&oldid=595708" இலிருந்து மீள்விக்கப்பட்டது