பக்கம்:பொன் விலங்கு.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 r பொன் விலங்கு

கண்ணாயிரத்தின் கார் புறப்பட்டுச் சென்றபின் விமான நிலைய எல்லையை விட்டு வெளியே நடந்தபோது இவ்வளவு சிந்தனைகளும் மனத்தில் அலைபாயச் சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. விமானநிலையத்துக்கு வரும்போது பூபதியும் அவர் மகள் பாரதியும் உடன் வரக் கண்ணாயிரம் ஒட்டிக்கொண்டு வந்த அதே காரை விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்லும்போது கண்ணாயிரம் உடன் வரப் பாரதி ஒட்டிக்கொண்டு சென்றதையும் சத்தியமூர்த்தி கவனித்தான். பெரிய மனிதர்களில் பெரும்பாலோர் தங்களோடு ஒத்த அளவு அல்லது அதிக அளவு ஸ்டேட்டஸ் உள்ளவர்களிடம் என்னென்ன குணக்குறைவுகள் இருந்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளாததுபோல் மன்னித்துவிட்டுப் பழகுவதும், அதேசமயத்தில் தங்களோடு ஒத்த அளவு'ஸ்டேட்டஸ்' இல்லாதவர்களிடம் மிகமிகச் சிறந்த குணநலன்கள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமலே அலட்சியமாயிருப்பதுமாக வாழ்ந்து கொண்டிருப்பதைப் பற்றி அவன் பலமுறை மனம் கொதித்துச் சிந்தித்திருக்கிறான். .

அவன் சந்தித்த பெரிய மனிதர்களில் பூபதி ஒரு விதிவிலக்காக இருந்தார். குண நலன்கள் யாரிடமிருந்தாலும் பாராட்டுகிற அவரது பெருந்தன்மையை அவன் விரும்பினான். 'வி வாக்ஸ் இன் ப்யூட்டி என்ற ஆங்கிலக் கவிதையை அவன் வகுப்பில் நடத்திய தினத்தன்று அவனுக்கே தெரியாமல் வகுப்புக்கு வெளியே நின்று கடைசிவரை கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, வகுப்பு முடிந்து அவன் வெளியே வந்ததும் மனப்பூர்வமாகப் பாராட்டினார் அவர். ஆனால் அவரிடமும் ஜமீன்தார், கண்ணாயிரம் போன்றவர்களை மன்னித்துப் புகழ்ந்து மதிக்கிற குணம் இருக்கிறது என்பதை நேற்றும் இன்றும் நடந்திருந்த நிகழ்ச்சிகளால் சத்தியமூர்த்தி புரிந்து கொண்டிருந்தான். நல்லவர்களைப் புகழாவிட்டாலும் பரவாயில்லை. அப்படிப் புகழாதவர்களை மன்னிக்கலாம். கெட்டவர்களை அநாவசியமாகத் துக்கி வைத்து மதித்துப் புகழ்கிறவர்களை மன்னிக்கவே முடியாதென்று தோன்றியது. -

மதுரையிலிருந்து விமான நிலையத்தை ஒட்டிச் செல்லும் பிரதான சாலை அருப்புக்கோட்டைக்குப் போவது. சத்தியமூர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/462&oldid=595710" இலிருந்து மீள்விக்கப்பட்டது