பக்கம்:பொன் விலங்கு.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 பொன் விலங்கு

மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போனான். கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு வடக்குக் கோபுர வாசல் வழியாக அவன் வெளியேறிய போது இரவு ஏழுமனிக்கு மேலிருக்கும். அப்புறம் உடனே வீட்டுக்குப் போக வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவில்லை. வடக்குக் கோபுர வாசலில் வெற்றிலை பாக்குக் கடையை முற்றுகையிட்டிருந்த வித்வான் பொன்னுசாமி பிள்ளைத் தெருப் பாட்டு வாத்தியார் சத்தியமூர்த்தியைப் பார்த்துவிட்டார்.

'அடடே ஐயாவைப் பார்த்து மாதக் கணக்காகி விட்டதே! மல்லிகைப் பந்தலிலே காலேஜ் வாத்தியாராயிருப்பதாகச் சொன்னாங்க... ரொம்ப சந்தோஷம். எங்கேயாவது நல்லாயிருக்க வேண்டியதுதானே?' என்று பேசிக் கொண்டே அவனோடு கூட நடந்துவிட்டார் பாட்டு வாத்தியார். நல்ல இசை வேளாளர் பரம்பரையில் வந்தவராகிய இந்தப் பாட்டு வாத்தியார் எப்போது சந்தித்தாலும் அதிகமாக வழவழவென்று பேசுவார் என்ற ஒன்றைத் தவிரசத்தியமூர்த்திக்குஇவரை மிகவும் பிடிக்கும். அரை மணிநேரம் சந்தித்துப் பேசினால் கூடத் தஞ்சாவூர்க் கோவிந்த தீட்சிதர் எழுதிய 'சங்கீத கதாநிதி'யிலிருந்து வித்துவான் பொன்னுசாமிப் பிள்ளை இயற்றிய பூர்வீக சங்கீத உண்மை' என்ற அபூர்வ நூல் வரை எல்லாவற்றைப் பற்றியும் சொல்லிவிட வேண்டுமென்று சுறுசுறுப்பாகத் தொடங்கி விடுவார். ஒவ்வொரு கலையிலும் அதிர்ஷ்டம் எட்டிப் பார்க்காத துரதிர்ஷ்டம் பிடித்த மேதைகள் இப்படிப் பலர் இருப்பார்கள். இந்தப் பாட்டு வாத்தியாரும் அத்தகைய பலரில் ஒருவராகத்தான் இருந்தார். இவரைப் போல் அவ்வளவு ஞானமில்லாதவர்கள் இவரிடமே அரை குறையாகப் படித்துவிட்டுப் போனவர்கள் எல்லாம் சீனியர் வித்வான்களாகிக் காரை விட்டுக் கீழிறங்காமல் சுற்றிக் கொண்டிருக்கிற இதே மோசக்கார உலகத்தில் கடந்த இருபது வருடங்களாக முன்னேற முடியாமல் இந்தத் தெரு முனையில் உள்ள வெற்றிலை பாக்குக் கடையிலே இவர் தயங்கி நின்றுவிட்டார். அதிர்ஷ்டத்துக்கும் இவருக்கும் இடையேயுள்ள தூரம் அல்லது இவருக்கும் அதிர்ஷ்டத்துக்கும் இடையே உள்ள பகைமை அதிகமாகிவிட்டது. கோயிலிலிருந்து வெளியேறி வந்திருந்த சத்தியமூர்த்தியும் இரண்டு நாட்களாகத் தன் மனத்தை உறுத்திக் கொண்டிருந்த ஒரு சந்தேகத்தை இந்தப் பாட்டு வாத்தியாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிவு செய்தான். பாட்டு வாத்தியாருடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/464&oldid=595712" இலிருந்து மீள்விக்கப்பட்டது