பக்கம்:பொன் விலங்கு.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 பொன் விலங்கு

ஒவ்வொன்றாக அடுத்தடுத்துப் பாலத்தின்மேல் வந்து கொண்டிருந்தன. கீழே இரயில்வே லயனில் ஷண்டிங்' என்ஜின் ஒன்று இங்கும் அங்குமாகப் புகை கக்கியபடி 'விலில் ஒசையோடு போய் வந்து கொண்டிருந்தது. -

பாட்டு வாத்தியாரும் சத்தியமூர்த்தியும் பாலத்தின் இரும்புக் கிராதியில் சாய்ந்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள்.

காலையிலிருந்து-இன்னும் நன்றாகச் சொல்லப் போனால் முந்திய தினம் குமரப்பன் இரயிலேறிப் போனதிலிருந்து தன் மனத்தை உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயத்தை-மோகினியின் தெருவுக்குப் பக்கத்துத் தெருக்காரராகிய அந்தப் பாட்டு வாத்தியாரிடம் அந்தரங்கமாக விசாரித்தான் அவன்.

'குடியிருக்கிற வீடு வாசல் எல்லாம் ஜமீன்தார் செலவிலே அனுபவிக்கிறவங்க வேறே எப்படி இருக்க முடியும்? அவங்க பரம்பரையாஜமீன் குடும்பத்துக்குப் பழக்கம்' என்று முதல் நாள் தன் தந்தை மோகினியைப் பற்றித் தன்னிடம் கூறியிருந்ததையும் குமரப்பன் இரயில் நிலையத்தில் எச்சரித்ததையும் அதற்குத் தொடர்பாக இன்று காலை ஆஸ்பத்திரியில் வஸந்தசேனை - சாருதத்தன் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தபோது ஜமீன்தாரின் கார் வந்து விட்ட ஓசையைக் கேட்டுத் தன் எதிரிலேயே மோகினி பயந்து மிரண்டதையும் நினைத்துச் சத்தியமூர்த்தி மனம் குழம்பிப் போயிருந்தான். ஜமீன்தாரையும் கண்ணாயிரத்தையும் அவள் வெறுக்கிறாள் என்பதற்காக அவளைப் பாராட்டிய அதே சத்தியமூர்த்தியால் அவர்களுக்காக அவள் பயப்படவும் செய்கிறாள் என்பதைச் சிறிதுகூடப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஜமீன்தாருக்கு அவள் பயப்படுகிற பயத்துக்கு என்ன அர்த்தம் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல்தான் மனக் குழப்பம் அடைந்திருந்தான்.அவன். பழைய தலைமுறை மனிதராகிய இந்தப் பாட்டு வாத்தியாரை விசாரித்தால் ஏதாவது சில விவரங்கள் தெரியலாமென்றுதான் இப்போது அதைப் பற்றி அவன் அவரை விசாரித்தான். சங்கீத விநாயகர் கோவில் தெருவில் மோகினி குடியிருக்கிற வீடு ஜமீன் வீடுதான் என்ற உண்மையைப் பாட்டு வாத்தியார் அழுத்தமாக வற்புறுத்திச் சொன்னார். மோகினியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/466&oldid=595714" இலிருந்து மீள்விக்கப்பட்டது