பக்கம்:பொன் விலங்கு.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 467

எழுந்து திருத்தக் கூடாதோ?" என்று பன்னிரண்டு மணிக்கு அம்மா வந்து அவனைக் கோபித்துக் கடிந்து கொண்டிருந்தாள். மறுநாள் காலையிலும், அவனால் மோகினியைத் தேடி ஆஸ்பத்திரிக்குப் போகாமல் இருக்க முடியவில்லை. தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடியாத அத்தனை பெரிய ஆவலை அவள் அவனிடம் உண்டாக்கியிருந்தாள். முதல் நாள் தான் ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தபோது கூந்தலுக்குப் பூவில்லாமல் அவள் வெறுங் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டிருந்த நிகழ்ச்சி நினைவு வரவே ஞாபகமாக இன்று கீழமாசி வீதிப் பூக்கடைக்குப் போய் நல்ல மல்லிகைப் பூவாக நாலுமுழம் வாங்கிக் கொண்டபின் புறப்பட்டிருந்தான் சத்தியமூர்த்தி. நேற்றுப் போல் மோகினியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கண்ணாயிரம், பாரதி - இவர்களெல்லாம் இன்றைக்கும் ஆஸ்பத்திரிக்குத் தேடிக்கொண்டு வந்தால் என்ன செய்வது?’ என்று சிந்தித்து அப்படி அவர்கள் வந்தாலும் தான் பாதியிலேயே அங்கிருந்து புறப்படுவதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டிருந்தான் அவன். தான் கொண்டு போகிற பூவை மோகினியின் கூந்தலில் தானே சூட்டிவிட்டு அவளிடம் என்னென்ன பேச வேண்டும், எப்படி நயமாகப் பேசவேண்டும் என்றெல்லாம் நினைத்தபடியே போய்க் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி.

'தன் கணவன் &Ꭶ&© செளபாக்கியங்களோடும் நன்றாயிருக்கிறான் என்பதை அவனுடைய கிருகலட்சுமியான மனைவி பூவும், மஞ்சளும், குங்குமமுமாகப் பொலிந்து தோன்றுவதன் மூலமாக உலகுக்கு நிரூபிக்கிறாள் தன்னுடைய வாழ்வில் மங்கலங்கள் நிரம்பி யிருக்கின்றன என்பதை உலகத்துக்கு மிக நாகரிகமாகச் சொல்லும் சின்னங்களாக ஒரு குடும்பப் பெண்ணுக்குப் பூவும், மஞ்சளும், குங்குமமும் இந்த நாட்டில் வாய்த்திருக்கின்றன." என்று பூவைச்சூட்டிவிட்டு அவளிடம் சொல்ல வேண்டும் என்பதாகத் தோன்றியது. அதற்கு அவள் தன்னிடம் என்ன பதில் சொல்வாள் என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். "அப்படியானால் உங்களை நினைத்து நீங்கள் எனக்குக் கணவராகக் கிடைத்திருக்கிற செளபாக்கியத்தை ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக நான் இனிமேல் நாள் தவறாமல் பூச்சூடி மையிட்டுத் திலகமணிந்து மங்கலமாகவிளங்குவேன்' என்று அவள் புன்னகையோடு மறுமொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/469&oldid=595717" இலிருந்து மீள்விக்கப்பட்டது