பக்கம்:பொன் விலங்கு.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 469

ஜமீன்தாருடைய கார் வந்து அந்த வீட்டில் இருந்த தம்புரா, வீணை முதலிய வாத்தியங்களையெல்லாம் ஒழித்து எடுத்துக்கொண்டு போனது மட்டும் தனக்குத் தெரியும் என்று பையன் சொன்னான். சத்தியமூர்த்தி உடலும், மனமும் சோர்ந்து வீடு திரும்பினான். அப்போது அவன் இதயத்தைப் போலவே கையில் அவளுக்காகக் கொண்டு போயிருந்த அந்த மல்லிகைப் பூவும் வாடியிருந்தது.

'அந்த வீட்டில் இருந்த மங்கலமான வாத்தியங்களையெல்லாம் அங்கிருந்து ஒழித்து எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள் ஆம்! அவனுக்கு-அவன் வாசிப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட பரிசுத்தமான வாத்தியத்தையும் சேர்த்துத்தான்! நினைக்கவும் வேதனை தருவதாக இருந்தது, அந்த உண்மை ஹெர் லைஃப் இஸ் எ ரிவால்விங் ட்ரீம்" - (அவளுடைய வாழ்க்கை மேலும் மேலும் சுழன்று வளரும் ஒரு கனவாகிறது) என்று கவிக்குயில் சரோஜினி நாயுடு பாடியிருக்கிற ஆங்கிலப்பாடல் வரி ஒன்றை நினைவு கூர்ந்தான் சத்தியமூர்த்தி, லாரோ லுக்ஸ் இன்ட்டு ஹெர் ஃபேஸ் (சொல்லிலடங்காத சோகங்கள் அவள் முகத்தில் தென்படுகின்றன) என்று அதே பாடலில் வருகிற இன்னொரு வாக்கியத்தையும் மோகினியைப் பற்றி நினைக்கும்போதும் அவனால் சேர்த்து நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவனுடைய எல்லாவிதமான அவநம்பிக்கைகளுக்கும் நடுவே அவள் மட்டும் ஒரு நிச்சயமாகியிருந்தாள். ஆனால், அவள் வாழ்கிற சூழ்நிலையோ எந்த் விதத்திலும் நிச்சயமில்லாமல் இருந்தது. மனம் ஒப்பி-மறுக்காமல்-தவிர்க்காமல் அவள் ஜமீன்தாருடைய வீட்டுக்குப் போய் விட்டாள்-என்பதை நினைக்கவும்-பொறுத்துக் கொள்ளவும் நம்பவும் முடியாமல் தவித்தான் அவன். அவள்மேல் கோபப்படுவதாபரிதாபப்படுவதா-என்று நினைத்து நெடுநேரம் ஒரு முடிவும் கிடைக்காமல் அவன் மனம் குழம்பினான். அவள் மேல் எந்தக் காரணத்துக்காகக் கோபித்துக் கொள்ளத் தொடங்கினாலும்கூட அந்தக் கோபம் தானாகவே தளர்ந்து நெகிழ்ந்து வெறும் பரிதாபத்திலோ, அநுதாபத்திலோ போய் முடிந்தது.

அவள் என்ன செய்வாள்? பாவம்! பேதைப் பெண். ஜமீன்தாரையும், கண்ணாயிரத்தையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் என்னைப் போலவோ குமரப்பனைப் போலவோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/471&oldid=595720" இலிருந்து மீள்விக்கப்பட்டது