பக்கம்:பொன் விலங்கு.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 பொன் விலங்கு

அவர்களை வெளிப்படையாக வெறுக்கவோ பகைத்துக் கொள்ளவோ அவளுக்கு வலிமை இல்லை. அது அவளுடைய குற்றமாகாது' என்று நினைத்து அவன் மன அமைதி பெற முயன்றாலும் முடியவில்லை. பூபதியைச் சந்திப்பதற்காக மஞ்சள்பட்டி ஜமீன்தாருடைய மாளிகைக்குச் சென்றபோதே அங்கு கால்கள் பொருந்தாமல் நின்றேன் நான். பூபதி எனக்கு எழுதியிருந்த கடிதத்தில் வைகைக் கரை மாளிகை - என்ற பொருளில் "ரிவர்காசில் - கோச்சடை மதுரை என்று மட்டுமே மதுரையில் தாம் தங்கப் போகிற இடத்து முகவரி கொடுத்திருந்தார். அதுதான் ஜமீன் மாளிகை என்று தெரிந்திருந்தால் ஒரு வேளை அங்கு நான் போயே இருக்க மாட்டேன். இப்போது மோகினியைச் சந்திப்பதற்காக இன்னொரு முறையும் நான் அங்கே எப்படிப் போவேன்?" என்று தயங்கியது அவன் உள்ளம். -

முதல் நாள் பகல் தன்னைத் தேடி வந்திருந்த நண்பர்களில் ஒருவன் இன்று பகலில் உணவிற்குத் தன்னை அவன் வீட்டுக்கு அழைத்துவிட்டுப் போயிருந்தது, இப்போது சத்தியமூர்த்திக்கு ஞாபகம் வந்தது. நண்பனுடைய வீட்டுக்குச் சாப்பிடப்போவதாவேண்டாமா என்று நீண்ட நேரம் மனம் குழம்பி ஒரு முடிவுக்கும் வராமல் இருந்தபின் கடைசியாகப் போவது என்று முடிவு செய்தான். அந்த நண்பனுடைய வீடு. நன்மை தருவார் கோயில் தெருவில் இருந்தது. அங்கே போய் பகல் உணவை முடித்துக் கொண்டு நண்பனோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்படியே கோச்சடைக்குப் போய் ஜமீன்தார் மாளிகையில் மோகினியைச் சந்திக்கலாம் என்று எண்ணிக்கொண்டு புறப்பட்டிருந்தான் சத்தியமூர்த்தி. -

அந்த நண்பனுக்கு வானொலியில் திரைப்பட இசை கேட்கிறதென்றால் உயிர் பக்கத்தில் நான்கு வீடுகளுக்குக் கேட்கிற மாதிரி ஓசை வைத்து அவனும் அவனுடைய தங்கையுமாக வானொலி இசை வெள்ளத்தில் மெய்மறந்து மூழ்கியிருந்தபோது, சத்தியமூர்த்தி உள்ளே நுழைந்தான். எங்கே சத்தியமூர்த்தி சாப்பிட வராமல் ஏமாற்றிவிடுவானோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கு அவனைப் பார்த்ததும்தான் நிம்மதி பிறந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/472&oldid=595721" இலிருந்து மீள்விக்கப்பட்டது