பக்கம்:பொன் விலங்கு.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 473

தெரிவித்தார்கள். டெலிபோன் டைரக்டரியில் மஞ்சள்பட்டி ஜமீன்தாருடைய பங்களாவின் தொலைபேசி எண்ணைத் தேடிக் கண்டுபிடித்து விசாரிக்க எண்ணினான் சத்தியமூர்த்தி. ஆனால் அந்த முயற்சியும் பயன்படவில்லை. அந்த எண்ணில் யாருமே டெலிபோனை எடுக்கவே இல்லை. நீண்ட நேரமாக மணி அடித்துக் கொண்டேதான் இருந்தது. நேரில் அங்கேயே போய்விடலாம் என்ற தீர்மானத்துக்கு வந்தவனாகச் சத்தியமூர்த்தி டெலிபோனை வைத்துவிட்டான். அவன் மனம் ஒரு நிலை கொள்ளாமல் பரபரப்பு அடைந்திருந்தது.

'இந்த நூற்றாண்டின் கார் விபத்துகளும், விமான விபத்துகளும், இரயில் விபத்துகளுமே முக்கால் பங்கு மனிதர்களைக் கொன்று விடும் போலிருக்கிறது சத்தியம். ஏதோ விஜயதசமியன்று பத்மபூரீ விருது வாங்குவதற்காக டில்லிக்கு போகிறார் என்று உங்கள் கல்லூரி அதிபர் பூபதியைப் பற்றிப் பத்திரிகைகளில் எல்லாம் பிரமாதமாக வந்திருந்ததே? என்ன பரிதாபம்! இப்படி ஒரு பெருமையும் கிடைத்து, அதை அடைவதற்குள்ளேயே சாகிற மனிதன் எவ்வளவு பெரிய துர்பாக்கியமுள்ளவனாக இருக்க வேண்டும்' என்று நண்பன் வருத்தப்பட்டுக் கொண்டே உடன் வந்தான். நண்பனை அப்புறம் சந்திப்பதாகச் சொல்லி அவனுக்கு விடைகொடுத்து அனுப்பியபின் ஒரு சைக்கிள் ரிக்ஷா வாடகைக்குப் பேசிக் கொண்டு மஞ்சள்பட்டி பங்களாவுக்கு விரைந்தான் அவன். பூபதியின் மகள் பாரதியும் முதலில் இதே விமானத்தில் அவரோடுகூட டில்லிக்குச் செல்வதற்கு இருந்ததும், அப்புறம் கடைசி விநாடியில் தன் பயணத்தை நிறுத்திவிட்டதையும் ரிக்ஷாவில் போய்க்கொண்டிருந்தபோது சத்தியமூர்த்தி நினைத்தான்.

அவரை மரணத்தின் பாதையில் இழுத்துக் கொண்டுபோன அதே விதி அவருடைய மகளை மிகவும் நல்லெண்ணத்தோடு கடைசி விநாடியில் அந்தப் பாதையிலிருந்து திருப்பி அழைத்துக்கொண்டு வந்துவிட்ட விந்தையை அவன் மனம் வியந்தது. இரயில்வே மேம்பாலத்தின் ஏற்றத்தில் கீழே இறங்கி ரிக்ஷாவைக் கையினால் தள்ளிக் கொண்டு போகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/475&oldid=595724" இலிருந்து மீள்விக்கப்பட்டது