பக்கம்:பொன் விலங்கு.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 பொன் விலங்கு

தொடங்கியிருந்தான் ரிக்ஷாக்காரன், ரிக்ஷா மிகமிக மெல்ல நகர்ந்தது. அப்போதிருந்த பரபரப்பான மனநிலையில் அந்த வேகக் குறைவைக் கூடச் சத்தியமூர்த்தியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பூபதியைத் தான் மதுரை விமான நிலையத்தில் கடைசியாகப் பார்த்த கோலத்தை நினைவு கூர்ந்தான் அவன்:

"என்னம்மா?... நான் வரட்டுமா? கடைசிப்படி ஏறுவதற்குள் மறுபடி நானும் உங்களோடு டில்லிக்கு வருவேன்' என்று மாறிவிட மாட்டாயே? நிச்சயமாக.நீவரவில்லைதானே?" என்பதாக விமானப் படிக்கட்டை நோக்கி நடப்பதற்குமுன் தம் மகளிடம் சிரித்துக் கொண்டேகேட்டபூபதியின்தோற்றம் இப்போதுதான் பார்த்துவிட்டு வந்ததுபோல் சத்தியமூர்த்திக்கு ஞாபகம் வந்தது.

ஊருக்குப் போய்விட்டுத் திரும்புவதற்காக அவர் அப்படிச் சொல்லிக் கொண்டு போனாரா? அல்லது இந்த உலகத்தை விட்டே போய்விடப் போகிறோமென்றுதான் அத்தனை கனிவாகவும் அவ்வளவு பாசத்தோடும் சொல்லிக் கொண்டு போனாரா என்று எண்ணியபோது சத்தியமூர்த்திக்குக் கண் கலங்கியது.

"பூபதியின் அருமை மகள் பாரதி இந்தப் பேரிடி போன்ற துயரச் செய்தியை அறிந்து எவ்வாறு கதறித் துடித்து அழுதிருப்பாள்?' என்று அவனால் அவளுடைய துயரத்தைக் கற்பனை செய்யவும் முடியாமலிருந்தது.

எல்லாப் பெரிய மனிதர்களிடமும், பிரமுகர்களிடமும் இருந்த சில பொதுவான குறைபாடுகள் பூபதியிடமும் இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் கடந்த சில தினங்களில் அவரை 'ஜெகில் அண்ட் ஹைடாக எண்ணித் தான் மனம் கொதித்ததையும் இப்போது சத்தியமூர்த்தி நினைத்தான். பலரிடம் இருந்த அந்தச் சில குறைபாடுகளோடு பலரிடம் இல்லாத சில நிறைவான நல்ல குணங்களும் பூபதியிடம் இருந்ததை அவனால் மறந்துவிட முடியவில்லை. -

தங்களுக்கு எதிரே பிறர் உட்கார்ந்து பேசுவதுகூட மரியாதைக் குறைவு என்று அற்பத்தனமாக நினைக்கிற பல போலிப் பெரிய மனிதர்கள் நிறைந்திருக்கிற இந்த உலகில் தம்முடைய கல்லூரியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/476&oldid=595725" இலிருந்து மீள்விக்கப்பட்டது