பக்கம்:பொன் விலங்கு.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 475

விரிவுரையாளராக வந்திருக்கிற ஓர் இளைஞரை அன்போடு வரவேற்று எதிரே அமரச் செய்துவிட்டு விருந்தாளியை உபசரிப்பது போல் பெருந்தன்மையாகப் பழகிய பூபதியையும், வகுப்பில் அதே இளைஞரின் விரிவுரையைக்கேட்டுப்பாராட்டிய பூபதியையும், அந்த இளைஞரையே உதவி வார்டனாக நியமித்துப் பெருமைப்பட்ட பூபதியையும் போற்றாமலிருக்க முடியுமென்று தோன்றவில்லை. அதேபூபதியிடம் சொந்தபலவீனங்கள் காரணமாக இருந்தசில குற்றங் குறைகளை அவன் வெறுத்தாலும் பலருக்குநிழல் தந்துகொண்டிருந்த பெரிய ஆலமரத்தில் இடிவிழுந்து எரிந்ததைப்போல் அவருடைய இந்த மரணத்தை அவனால் பொறுத்துக்கொள்ள முடியாமலிருந்தது. குணக்குற்றங்களில் ஒன்றே முழுமையாகநிறைந்தமனிதர்கள் உலகில் எங்குமே இல்லைதான். பல நல்ல குணங்களுக்காகச் சில குற்றங்களையாவது மன்னிக்கிற சுபாவம் பொது வாழ்க்கைக்கு அவசியம் வேண்டும் போலும் என்ற பலவீனமான சிந்தனை ஒன்றும் அவனுடைய தளர்ந்த மனத்தில் இப்போது எழுந்தது. செய்கிற பாவங்களுக்காகச் சில சமயங்களில் சிலர் மன்னிக்கப்படுகிறார்கள். செய்யாத புண்ணியங்களுக்காவும் சில வேளைகளில் சிலர் மன்னிக்கப்படுகிறார்கள். சிலர் எதற்காகவும் எப்பொழுதுமே மன்னிக்கபடுவதில்லை என்று எந்த நாட்டுப் பழமொழியோ ஒன்று உண்டு. இந்தப் பழமொழியின்படி ஜமீன்தாரையும், கண்ணா யிரத்தையும் எதற்காகவும் எப்போதும் மன்னிக்க முடியாது. ஆனால் பூபதி அப்படிப்பட்டவரில்லை. அவரை எதற்காகவோ நிறையப் பாராட்டவும் வேண்டும் எதற்காகவோ கொஞ்சம் மன்னிக்கவும் வேண்டும் என்றுதான் தோன்றியது. கல்வி வளர்ச்சியில் ஆர்வமும், பெரிய இலட்சியங்களும் கொண்டு பூபதி நிறுவிய மல்லிகைப் பந்தல் கல்லூரி எதிர்காலத்தில் சரியாய்ப் பேணுவார் இல்லாமல் எடுப்பார் கைப்பிள்ளையாகவும், நிராதரவாகவும் போய் விடுமோ என்றெண்ணியபோதே ஒரு நல்ல கனவு கலைவது போல் துயரமிருந்தது. . ... . ;

கல்வித் துறையில் தாம் சாதித்த சாதனைகளுக்காகத் தகுந்த பாராட்டுப் பெறச் சென்று கொண்டிருந்த வேளை பார்த்து பூபதியைக் காலன் கவர்ந்து கொண்டு விட்டானே என்று அந்த விமான விபத்தை நினைப்பதற்கும் நம்புவதற்கும் கூட முடியாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/477&oldid=595726" இலிருந்து மீள்விக்கப்பட்டது