பக்கம்:பொன் விலங்கு.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 477

'அதுதாங்க... பழைய பள்ளிக்கூடத்து வாத்தியாரு. பேச்சியம்மன் படித்துறையிலேருந்து வருவாரே! அந்தக் கிழவருதாங்க..." என்று சத்தியமூர்ததிக்குப் பதில் கூறினான் தோட்டக்காரன். தன்னுடைய சந்தேகப்படியே அவன் குறிப்பிட்ட கிழவர் தன் தந்தைதான் என்பதைச் சத்தியமூர்த்தி விளங்கிக் கொள்ள முடிந்தது. சத்தியமூர்த்தி அங்கிருந்து திரும்பி விடும் எண்ணத்தோடு தயங்கி நின்ற போது அந்த மாளிகையில் முன் கூடத்து அறையில் அவனுக்குப் பழக்கமான குரல் மெல்ல விசும்பி அழுகிற ஒலி கேட்டது. மோகினி அங்கேதான் இருக்கிறாளா? என்பதை அந்தத் தோட்டக்காரனிடம் எப்படி விசாரிப்பது என்றெண்ணித் தயங்கிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி, இந்த அழுகை ஒலியைக் காரணமாக வைத்தே தான் நினைத்த கேள்வியைத் தோட்டக்காரனிடம் சுலபமாகக் கேட்க முடிந்தது.

'யாரோ உள்ளே ரொம்ப நேரமா அழுது கொண்டிருக் கிறார்கள் போலிருக்கிறதே? யார் அது?' என்று கேட்டான்

சத்தியமூர்த்தி.

43 ټيم% تنفطَلَهُ
تمدنيfضيئ ممسي .

米 பரிச்சுத்தமான அன்பு என்பது மனம் நெகிழ்ந்து உருகும் தூயவர்களின் கண்ணிரால் இவ்வுலகில் நிரூபிக்கப்

படுகிறது.

- 米 சத்தியமூர்த்தியின் கேள்விக்குத் தோட்டக்காரனும் புண்பட்ட மனத் தோடுதான் பதில் சொன்னான், "இந்த அழுகைக்கு எங்கே விடிவு பொறக்கப் போகுது? இதை நீங்களும் நானும் கேட்டு ஒண்ணும் ஆகப் போகிறதில்லீங்க. தெய்வம் இருக்குதே தெய்வம், அதுக்குக் காதுன்னு ஒண்ணு இருந்தா அது செவி சாய்ச்சு கேட்க வேண்டிய அழுகை இது இந்த வயித்தெரிச்சலைக் கேட்காதீங்க... இது இன்னொரு கண்றாவிக் கதை...' என்று தொடங்கிக் குரலைத் தணித்துக்கொண்டு ஏதோ ஆவேசம் வந்தனைப் போல் மேலும் மேலும் மனக் கொதிப்போடு பேசலானான் அந்தத் தோட்டக்காரன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/479&oldid=595728" இலிருந்து மீள்விக்கப்பட்டது