பக்கம்:பொன் விலங்கு.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 பொன் விலங்கு

நகர்வதுபோல்நகர்ந்துவந்து ஜன்னலின்உட்புறம் அவனெதிரேநின்று பயபக்தியோடு கைகூப்பினாள். அவனிடமிருந்து நீங்கிப்போய் விலகிய வாழ்க்கையின் சுகங்களைப்போல் அந்த வீணை தரையில் தனியே கிடந்தது. பேச வார்த்தைகள் கிடைக்காமலோ கிடைத்த வார்த்தைகளைக் கொண்டு பேச முடியாத அளவற்ற வேதனையினாலோ அவளையே இமையாமல்பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றான் சத்தியமூர்த்தி. அவள் அவனுடைய கம்பீரமான முகத்திலும் கண்களிலும் ஒளிர்ந்த துய்மையைக் கெளரவிப்பதுபோல் அவனை நிமிர்ந்து பார்க்க நாணித் தலை குனிந்தாள்.

'கடைசியில் நான் இந்த நரகத்துக்கே வந்துவிட்டேன். சொல்லாமல் கொள்ளாமல் ஆஸ்பத்திரியிலிருந்து திடீரென்று 'டிஸ்சார்ஜ் செய்து என்னை இங்கே கொண்டு வந்து தள்ளி விட்டார்கள். பழைய வீட்டுக்கும் இனிமேல் போக முடியாது. அங்கேயிருந்த சாமான்களையெல்லாம் இங்கே ஒழித்துக்கொண்டு வந்தாயிற்று" என்று குமுறிக் கொண்டு வருகிற அழுகைக்கு நடுவே ஒலி தளர்ந்து நலிந்த சொற்களால் பேசினாள் அவள்.

"அந்தவீடும் ஜமீன்தாருடையதுதானாமே?” என்று அப்போது அவளைக் கேட்டுவிடுவதற்காக நாவின் நுனிவரை வந்துவிட்ட ஒரு கேள்வியைக் கேட்காமல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு விட்டான் அவன். மோகினியின் தாய் முத்தழகம்மாள் எந்த எந்த விதத்திலோ மஞ்சள்பட்டி ஜமீன் குடும்பத்துக்கு ஆட்பட்டு வீடு வாசல், உணவு உடை எல்லாம் ஜமீன்தாரிடம் ஏற்பாடு செய்து கொண்டிருந்தால் அதற்குப் பேதை மோகினி என்ன செய்வாள்? மோகினி அவளுடைய நாட்டியக் கலையில் மட்டுமே ஞானி! மற்றவற்றில் எல்லாம் அவள் வெறும் பேதை, பேதைகளை அதிகம் புண்படுத்துவது பாவம்' என்று எண்ணியது அவன் உள்ளம். அவளே மேலும் அவனிடம் பேசினாள்:

'நேற்று என்மேல் உங்களுக்குக் கோபம்போல் இருக்கிறது: ஜமீன்தாரும் மற்றவர்களும் காலையில் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தபோது நீங்கள் என்னிடம் சொல்லிக்கொள்ளாமலே அங்கியிருந்து போய்விட்டீர்கள்'-சத்தியமூர்த்தி இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/482&oldid=595732" இலிருந்து மீள்விக்கப்பட்டது