பக்கம்:பொன் விலங்கு.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 485

அவளுடைய இந்தச் சொற்கள் அவனைப் புல்லரிக்கச்

செய்தன. இந்தப் பேதையின் இதயத்தில்தான் எவ்வளவு உறுதியான அங்கீகாரம் நிரம்பியிருக்கிறது! நான் உங்கள் மனைவி'-என்று சொல்லிக் கொள்வதிலேயே இவளுக்கு வாழ்க்கையைப் பற்றிய சகலவிதமான திருப்திகளும் கிடைத்துவிடுவதாகப் பாவனை புரிய முடியுமானால் இது எவ்வளவு உயர்ந்த காதலாக இருக்க முடியும்? பரிசுத்தமான அன்பு என்பது மனம் நெகிழ்ந்து உருகும் தூயவர்களின் கண்ணீரால் இவ்வுலகில் நிரூபிக்கப்படுகிறது என்று சொல்வது இவளைப் பொறுத்தவரை எவ்வளவு பொருத்தமான வாக்கியம்? என்று எண்ணி அவளுடைய தோற்றத்தையே ஒரு வியப்பாகக் கருதி கவனித்தான் சத்தியமூர்த்தி. .

அவன் வாசிப்பதற்காகவே அவனெதிரே காத்து நிற்கும் நிர்மல வாத்தியமாய்-அப்போது நின்று கொண்டிருந்தாள் அவள். வாழ்வில் இரண்டு நன்மைகளின் நடுவே நிற்கும் சாமானியமான பல தடைகளைப் போல் அவனுக்கும் அவளுக்கும் நடுவே ஜன்னல் கம்பிகள் இருந்தன. : - x

"உன்னுடைய மங்கல நினைவுகள் வீண் போகாது." மோகினி' என்று உணர்ச்சிப் பெருக்கோடு தொடங்கி அவன் அவளிடம் ஆறுதல் கூறிக்கொண்டிருக்கும்போது, "நீங்கள் எனக்கு ஓர் வாக்குறுதி செய்து கொடுக்க முடியுமானால் நான் அதிர்ஷ்டசாலியாக இருப்பேன்" என்று பிச்சை கேட்பது போன்ற குரலில் அவனிடம் ஒரு வேண்டுகோளைத் தொடங்கினாள் அவள். அந்த வேண்டுகோளைக் கேட்டு அவன் கண்ணீர் சிந்தினான், அவன் மனம் நெகிழ்ந்து உருகியது. -

'இதென்ன அமங்கலமான வேண்டுகோள்?' என்று அதைக்

கேட்டு அவள்மேல் சீற்றங்கொண்டு அவன் கோபித்தான். ஆனால் அவளோ பிடிவாதமாக அந்த வேண்டுகோளையே வற்புறுத்தினாள்.

'உன்னுடைய வாழ்வின் திருப்தி இந்த மிக எளிமையான தேவைகளிலிருந்தே உனக்குக் கிடைத்துவிட முடியுமா மோகினி?" என்று அவன் எதிர்த்து வினாவியபோது அவளும் பதில் சொல்ல முடியாமல் பெரிதாக அழுதுவிட்டாள். ஆனால் அந்த அழுகையும் சில விநாடிகளில் நின்றது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/487&oldid=595737" இலிருந்து மீள்விக்கப்பட்டது