பக்கம்:பொன் விலங்கு.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 பொன் விலங்கு

ஆனால் இன்றைய சமூக வாழ்வின் குழப்பங்களுக்கிடையே அதுவே என்னுடைய பலவீனமாகவும் இருக்கிறது. ஜமீன்தாரிடமும், கண்ணாயிரத்திடமும் பணபலமும், ஆள் பலமும் இருக்கின்றன. என்னுடைய மனோபலத்தினால் நான் வெற்றி பெற அதிகநாள் ஆகும். அதுவரை உனக்குப் பொறுமையும் தைரியமும் இருக்குமானால், இந்தப் பரந்த உலகில் நீயும் நானும் எங்காவது என்றாவது கணவன் மனைவியாக ஊரறிந்து மணந்து வாழலாம்" என்று சத்தியமூர்த்தி கூறிக்கொண்டே வந்தபோது அவள் தன் கண்களில் மறுபடியும் நீர்மல்கக் குறுக்கிட்டுப் பேசினாள்:

'இப்போதே நான் உங்களை மணந்து உங்களோடுதான் வாழ்கிறேன். நீங்களே என் இதயத்தில் தெய்வமாக இருக்கிறீர்கள். உங்களை நினைத்து வாழ்வதாகப் பாவித்தபடியே இறந்துபோய் விட்டாலும்கூட என்னால் திருப்தி அடைய முடியும். ஆனால், என்னுடைய அந்த வேண்டுகோளை நீங்கள் எப்படியும் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நம்பிக்கையோடுதான் நான் என்னுடைய கடைசி மூச்சைக் காற்றில் கலக்க விடுவேன்.'

'அசடே உன்னுடைய இந்த அமங்கலமான பேச்சை முதலில் விட்டுவிடு. சாவைப்பற்றிப் பேசாவிட்டால் உனக்குப் பொழுது போகாதோ?”

"சில பேருக்கு வாழ்வே மகிழ்ச்சி நிறைந்த பொழுது போக்கு உள்ளதாயிருக்கிறது! அதுபோல எனக்குத் துயரமும் துயரச்சொற்களுமே பொழுது போக்காயிருக்கின்றன” என்றாள் அவள். இந்தச் சமயத்தில் தனக்குப் பின்னால் யாரோ வந்து நின்று கொண்டு அப்படி நிற்பதை உணர்த்துகிறாற்போல் கனைப்புக் குரல் கொடுக்கவே சத்தியமூர்த்தி திரும்பிப் பார்த்தான்.அவன் தந்தை அங்கே வந்து நின்று கொண்டிருந்தார். -

கை நிறைய ஒரு கட்டு பைல்களோடும், கணக்குப் புத்தகங்களோடும் சத்தியமூர்த்தி அப்போது அங்கு வந்து நின்று மோகினியோடு பேசிக் கொண்டிருப்பதைப் பொறுத்துக் கொள்ள, முடியாமல் முகம் நிறைய ஆத்திரத்தோடும் நின்றார்.அவன் தந்தை. 'புத்தி கெட்டவனே! நீ ஏன் இங்கு வந்து இவளைப் பார்த்துப் பேசிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/490&oldid=595741" இலிருந்து மீள்விக்கப்பட்டது