பக்கம்:பொன் விலங்கு.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 489

கொண்டிருக்கிறாய்?' என்று அவனைக் கடுமையான சீற்றத்தோடு கேட்பது போல் இருந்தது அவருடைய பார்வை. சத்தியமூர்த்தியின் மேல் அப்போது அவருக்கு எவ்வளவு வெறுப்பும், ஆத்திரமும் இருந்தன என்பதை நிரூபிப்பவர் போல்-வராந்தாவின் சுவர் ஒரத்தில் வேகமாக நடந்துபோய்த் தோட்டத்தில் காறித் துப்பினார் அவர். அப்புறம் அவனோடு பேசினால் எவ்வளவு ஆத்திரத்தைக் கொட்டியிருக்க முடியுமோ-அதைவிட அதிக ஆத்திரத்தோடு அவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே போனார். அவர் உள்ளே போன சிறிது நேரத்துக்கெல்லாம் யாரோ வேலைக்காரனைப் போலத் தோன்றிய முரட்டு ஆள் ஒருவன் சத்தியமூர்த்தியிடம் வந்து. "நீங்கள் என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள்? யாரைப் பார்க்க வேண்டும்?” என்று ஆளைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாகக் கேள்விகளைக் கேட்டான். அதோடு உள்ளேயிருந்து யாரோ சொல்லியனுப்பியதற்காக அந்தக் காரியத்தைச் செய்கிறவன்போல் மோகினி நின்று அவனோடு பேசிக் கொண்டிருந்த ஜன்னல் கதவையும் மூடுவதற்குத் தயாரானான் வேலையாள். அப்போது தான் அங்கிருந்து புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதைச் சத்தியமூர்த்தி புரிந்து கொண்டான். * . . . -

"கடைசியில் என்னை இந்த நரகத்திலேயே விட்டுவிட்டுப் புறப்படுகிறீர்களே?" என்று கேட்பது போல் நீர்மல்கும் கண்களால் மோகினி அவனை நிமிர்ந்து பார்த்தாள். எதிரே தெரியும் தோற்றத்தை நன்றாகக் காணமுடியாமல் மறைக்கும் ஜன்னல் கம்பிகளின் மறுபுறத்தில் இருந்து அவளைப்போல் தானும் வாய்விட்டு அழமுடியாமல் இதயத்தினால் அழுதுகொண்டு நின்றான் சத்தியமூர்த்தி,

"தைரியமாயிரு உன்னுடைய தூய்மையைக் காப்பாற்றிக் கொள். உடம்பைத்தான் மனிதர்களால் சிறைப்படுத்த முடியும். இதயத்தையும், எண்ணங்களையும் சிறைப்படுத்த முடியாது. விரும்பியதை அடைய முடியாமற்போவதும், விரும்பாததை அடைந்து விடுவதும்தான் துர்ப்பாக்கியசாலிகளின் வாழ்க்கையாக இருக்கிறது.ஆனால் நீயும் நானும் துர்ப்பாக்கியசாலிகள் இல்லை.

t

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/491&oldid=595742" இலிருந்து மீள்விக்கப்பட்டது