பக்கம்:பொன் விலங்கு.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 - பொன் விலங்கு

மாலையில் மலர்களைப் போல் நம்முடைய எண்ணங்கள் ஒன்றாகத் தொடுக்கப்பட்டிருக்கின்றன.' -

"அந்த மாலையிலும் நீங்கள்தான் பூ! நான் வெறும் நார்."

"இருக்கலாம் மோகினி! ஆனால் பூவைக் கட்டிப் பிணைப்பது நார்தானே?"

அவர்கள் இருவரும் மேலே பேசிக் கொண்டிருந்தவற்றைப் பேசிக்கொள்ள முடியாமல் ஜன்னல் கதவுகள் அடைக்கப்பட்டன. 'இன்னும் அதிகமான மரியாதைக் குறைவு எதுவும் நிகழ்வதற்குள் இங்கிருந்து வெளியேறி விடுவது நல்லதென்று சத்தியமூர்த்தி அங்கிருந்து மெல்ல நடந்தான். அப்பால் இருப்பதைத் தெரிய விடாத அந்த ஜன்னலின் மூடிய கண்ணாடிக் கதவுகளைத் திரும்பிப் பார்த்தபோது உள்ளே சிறைப்பட்டிருக்கும் சோகங்களை அவை அவனுடைய கண் பார்வையிலிருந்து மறைத்தன.

விமான விபத்தில் பூபதி மரணம் அடைந்துவிட்டதைத் தெரிந்து கொண்டதும் தாங்கமுடியாத சோகத்தோடு அவன் அந்த மாளிகைக்கு வந்தான். திரும்பும் பொழுதோ பூபதியைப் பறிகொடுத்த சோகத்தைவிடமோகினியைச் சந்தித்த சூழ்நிலையின் சோகங்களில் அவன் மனம் அழுந்திப்போயிருந்தது. அவளைப் பின் தங்கி விட்டுவிட்டுத் தான் மேலே நடந்து போகிறோம் என்ற நினைவினாலே அவனுடைய நடை தளர்ந்திருந்தது. ஜமீன்தாரின் நேர்மையற்ற வாழ்க்கையையும் ஒழுக்க நியாயங்களை மதிக்காத உன்மத்தம் பிடித்த போக்கையும் கண்டு ஒரு சாதாரணத் தோட்டக்காரனிடம் இருக்கிற குமுறலும் கொதிப்பும் கூடத் தன் தந்தையிடம் இல்லாமல் போயிற்றே என்று சத்தியமூர்த்தி வருந்தினான். என்ன மடமையான சமூக வாழ்க்கை இது? கோவிலில் அரை மணி நேரம் தெய்வத்தைத் தொழுகிறவர்கள்அதே கோவிலுக்கு வெளியே வந்து இருபத்து நான்கு மணி நேரமும் ஒழுக்கமோ நற்குணமோ இல்லாத வெறும் பணக்காரர்களைத் தொழுது வயிற்றைக் கழுவ வேண்டியிருக்கிறது. துர்த்தேவதைகளை வழிபடுகிறவர்களுக்கு உடனடியாகப் பலிக்கிற சில மந்திர தந்திர சாதனைகள் கிடைப்பதுபோல், இந்தக் குணக்கேடான வெறும் பணக்காரர்களைத் தொழுகிறவர்களுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/492&oldid=595743" இலிருந்து மீள்விக்கப்பட்டது