பக்கம்:பொன் விலங்கு.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 பொன் விலங்கு

பாரதியை மதுரையிலே சந்திந்து அவளுடைய தந்தையின் மரணத்துக்குத் துக்கம் விசாரித்து அநுதாபம் தெரிவிக்க நடந்த இடத்துக்குக் கண்ணாயிரத்தோடும் ஜமீன்தாரோடும் புறப்பட்டுப் போய் விட்டதாகத் தெரிந்ததனால் அவன் தன்னுடைய தீர்மானத்தை மாற்றிக் கொண்டு மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட வேண்டியிருந்தது. சரசுவதி பூஜையன்றைக்கு மாலை இரயிலில் அவன் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டு விட்டான். இரயிலில் அவன் இருந்த பகுதியில் உடன் வந்தவர்கள்கூட அந்தப் பயங்கரமான விமான விபத்தைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தார்கள். மோகனியின் துயரங்கள், பூபதியின் அகால மரணம், தன் தந்தையின்போக்கு எல்லாவற்றையும் நினைத்து நினைத்து உற்சாகம் இழந்த நிலையில் பயணம் செய்தான் அவன்.

மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்தில் பஸ் மாறி மலைக்குப் போய்ச் சேர்ந்தபோது மழை பிடித்துக் கொண்டது. மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் முழங்கால் நனைகிற அளவு தண்ணீர் பெருகியிருந்தது. மழை சிறிது நின்றதும் ஒரு ரிக்ஷாவைப் பிடித்து லேக் அவென்யூவுக்குப் போய்ச் சேரும் போது இரவு பதினொரு மணியாகிவிட்டது. குமரப்பன் அறையில் விழித்துக்கொண்டுதான் இருந்தான். உறங்கிக் கொண்டிருந்த தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனுக்கு இடையூறில்லாமல் மேஜை விளக்கை மட்டும் போட்டுக் கொண்டு பம்பாயிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழ் ஒன்றிற்குத் தான் வழக்கமாக வரைந்து அனுப்பும் 'கார்ட்டுனை வரைந்து கொண்டிருந்தான் குமரப்பன். சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் குமரப்பன் முதல் கேள்வியாகப் பூபதியின் மரணத்தைப் பற்றித்தான் விசாரித்தான். 'பெரிய மனிதர்களிலும், பணக்காரர்களிலும் கொஞ்சம் விதிவிலக்காயிருந்த ஒரே நல்ல மனிதனும் போய் சேர்ந்து விட்டானடா சத்தியம்'-என்று குமரப்பன் வருத்தப்பட்டான்.

"பூபதி இறந்து போய்விட்டார் என்பதை நினைத்துக் கொண்டு அந்த வேதனையோடு இந்த அழகிய மலை நாட்டு நகரத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/494&oldid=595745" இலிருந்து மீள்விக்கப்பட்டது