பக்கம்:பொன் விலங்கு.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 - - பொன் விலங்கு

பண வருமானத்தினால் மட்டும் சந்தோஷப்படாத கலைப் பேராசை வாய்ந்தது. சத்தியமூர்த்திக்கும் குமரப்பனின் பல குணங்கள் பிடிக்கும். அவற்றில் மிக முக்கியமானது குமரப்பனுடைய இந்தக் கலை மனம்தான். இரவு பன்னிரண்டு மணிக்கு மேலும் கண்விழித்துக் காகிதத்தையும், மையையும் சிந்தனையையும் முதலாக வைத்துக்கொண்டு அந்த அகாலத்திலும் இந்த உலகத்தில் கேலி செய்வதற்கு ஏதாவது விஷயம் இருக்கிறதா?’ என்று சிந்தித்துத் தவிக்கிற நண்பனை நினைத்து பெருமைப்பட்ட்ான் சத்தியமூர்த்தி.

பூபதியின் மரணம் மல்லிகைப் பந்தல் நகரத்தையே அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது என்பது மறுநாள் பொழுது விடிந்ததிலிருந்து தெரிந்தது. பூபதியின் தொழில் நிறுவனங்களாலும், கல்வி நிலையத்தினாலும், எஸ்டேட்டுகள் கம்பெனிகளாலும் தான் அந்த ஊரே இத்தனை பெரிதாக வளர்ந்தது. அதனால் எங்கு திரும்பினாலும் விமான விபத்தைப் பற்றியும், அவருடைய மணரத்தைப் பற்றியுமே பேசிக் கொண்டிருந்தார்கள். ஊரே களையிழந்து போய் விட்டாற் போலத் தோன்றியது. யாரைச் சந்தித்தாலும் இந்த மரணத்தைப் பற்றியே ஒருவருக்கொருவர் துக்கம் விசாரித்துக் கொண்டு தயங்கி நின்றார்கள்.

விஜயதசமிக்கு அடுத்த நாள் கல்லூரி திறப்பதாக இருந்தது. ஆனால் அன்று காலையில் கல்லூரி திறந்தவுடனேயே கல்லூரியை நிறுவியவராகிய பூபதியின் அகால மரணத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் முறையில் மூடி விடுமுறை விட்டுவிட்டார்கள். ஆசிரியர்களும் மாணவர்களும்-மாணவிகளும் கருப்புத் துணி பாட்ஜ் அணிந்து மல்லிகைப் பந்தல் வீதிகளில் துக்க ஊர்வலம் நடத்தியபின் கல்லூரி மைதானத்தில் ஓர் அநுதாபக் கூட்டமும் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் மாணவர்கள் எல்லாம் பூபதி அவர்களின் பெருந்தன்மையையும் கொடைப் பண்பையும் பற்றிப் பேசிக்கொண்டே சென்றார்கள். ஆனால் ஆசிரியர்களோ, பூபதிக்குப் பின்னர் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராக யார் வர இடமிருக்கிறது என்பது பற்றிய வாதப் பிரதிவாதங்களுடன் சென்றார்கள். அநுதாபக் கூட்டத்துக்கு கல்லூரி முதல்வர் தலைமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/496&oldid=595747" இலிருந்து மீள்விக்கப்பட்டது