பக்கம்:பொன் விலங்கு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பொன் விலங்கு

சந்தித்த முதல் விநாடியிலிருந்து அந்தப் பாதங்கள்தாம் அவளைக் கவர்ந்து அவள் மனத்தில் வந்து பதிந்து கொண்டு விட்டன. விரைந்து ஒடிப்போய் அந்தப் பாதங்களைக் கண்களில் ஒத்திக்கொள்ள நினைத்து அப்படிச் செய்ய முடியாதென்ற பயத்தினாலும் வெட்கத்தினாலும் மானசீகமாக அந்தத் திருப்தியை அடைந்தாள் அவள். பார்க்கிறவர்களைப் பைத்தியமாக்கும் ஏதோ ஒரு கவர்ச்சி அந்தப் பாதங்களில் எப்படியோ எதனாலோ இருந்ததை அவள் உணர முடிந்தது. பத்தே நிமிஷங்களில் பிரின்ஸிபலிடம் பேசி முடித்துக் கொண்டு திரும்பிவிட்டான் சத்தியமூர்த்தி. அவன் உள்ளேயிருந்து திரும்பவும் படிகளில் இறங்கிக் கீழே வரும்போதும் அவளுடைய கண்கள் அந்தப் பாத கமலங்களை நன்றாகப் பார்க்க முடிந்தது.

'பஸ் ஸ்டாண்டிற்குப் புறப்படுவதற்கு முன்பு ஒரு வேண்டுகோள். மழையாயிருந்தாலும் பரவாயில்லை. காரில் இருந்தபடியே ஒரு 'டிரைவ்’ சுற்றி வந்தால் எங்கள் கல்லூரியை நன்றாகப் பார்த்துவிடலாம் நீங்கள்...” என்றாள் அவள், சத்தியமூர்த்தியும் அதற்கு இணங்கினான்.

சுற்றிப் பார்க்கும்போது மிகுந்த அழகுணர்ச்சியோடும் இரசிகத் தன்மையோடும் அந்தக் கட்டிடவேலைகளைப் பூபதி செய்திருக்கிறார் என்பதை அவனால் உணர முடிந்தது. மலைச்சரிவில் மேடும் பள்ளமுமாக மாறி மாறி இருந்த இடங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. எங்கும் மழைநீர் தேங்கிவிடாமல் மழை பெய்த மறுகணமே இயற்கையாகவே நீர் வடிந்து இடங்கள் கண்ணாடியாய்ச் கத்தமாகி விடுகிறாற்போல் எல்லாக் கட்டிடங்களும் அமைக்கப் பட்டிருந்தன.

"இந்தக் கட்டிடங்களை இவ்வளவு அழகாய்க் கட்டுவதற்காக அப்பா எடுத்துக் கொண்ட சிரத்தை கொஞ்ச நஞ்சமில்லை. கல்கத்தாவிலிருந்து ஒரு பெரிய இஞ்சினியர் ஐந்து ஆண்டுகள் இங்கேயே வந்து தங்கியிருந்தார். இது முடிகிறவரை அப்பாவுக்கு இராப் பகல் தூக்கமில்லையாம். - - * ... -

"அதோ தோட்டத்துக்குள் நீண்டு தெரிகிற மாடிக் கட்டிடம் பெண்கள் தங்கியிருக்கும் விடுதி. இதோ இந்தக் கோடியில் அசோக மரங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கிற பாதை ஒன்று போகிறதே;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/50&oldid=595752" இலிருந்து மீள்விக்கப்பட்டது