பக்கம்:பொன் விலங்கு.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 பொன் விலங்கு

கூப்பிட்டனுப்பினார். முதல் காரியம் அவன் கூப்பிட்டனுப்பியதே எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நகரசபை அதிகார அடக்குமுறைக்குப் பயப்படாவிட்டால் நானும் என் கடையும் காலந்தள்ளிக் குப்பைக் கொட்ட முடியுமா? அதற்காக அவனைச் சந்திக்கப் போனேன். 'டிசைன் போர்டு எழுதுகிற பெயிண்டர் என்றால் ஏதோ கைகட்டி வாய் பொத்தி 'எசமான் உத்தரவுக்கு அடிமை காத்திருக்கேனுங்க என்பது போல் வந்து நிற்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

"இந்த ஊர்க்காரர்களுக்குப் பூக்காட்சியிலும் பழக்காட்சியிலும் மல்லிகைப் பூவுக்குக் கீழே, 'இதுதான் மல்லிகைப்பூ என்றும் ஆரஞ்சுப் பழத்துக் கீழே, 'இதுதான் ஆரஞ்சுப்பழம்' என்றும் எழுதி வைத்தால்தான் புரியுமோ சார்?-என்று பேச்சுப் போக்கில் சிரித்துக் கொண்டே மெதுவாக வாழைப் பழத்தில் ஊசி இறக்குவதுபோல் அந்தக் கமிஷனரிடம் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு வந்தேனடா சத்தியம். அப்புறம்தான் ஆள் என்னை யாரென்று புரிந்து கொண்டான். ஒழுங்காகக் கேட்ட தொகையைக் கொடுத்துப் போர்டுகளை எழுதி வாங்கிக் கொண்டான்."

சத்தியமூர்த்தி சிரித்தபடியே நண்பன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது தற்செயலாக அங்கு ஒரு மூலையில் அரைகுறையாக எழுதி வைக்கப்பட்டிருந்த ஒரு போர்டு சத்தியமூர்த்தியின் கண்பார்வையில் தென்பட்டுச்சிரிப்பு மூட்டியது. "என்னடாகுமரப்பன் இதற்கு என்ன அர்த்தம்?" என்று சிரித்தபடியே கேட்டுக்கொண்டே நண்பனிடம் அந்தப் போர்டை எடுத்துக் காட்டி வினவினான் சத்தியமூர்த்தி. அந்தப் போர்டில் 'உத்தரவின்றி உள்ளே பிரசவிக்கக் கூடாது" என்று குண்டு குண்டாக எழுதியிருந்தது. அதைப் பார்த்துக் குமரப்பனும் விழுந்து விழுந்து சிரித்தான். - * . .

"இதில் ஒரு சுவாரசியமான கதையே அடங்கியிருக்கிறது சத்தியம் நம்முடைய ராயல் பேக்கரி நாயர் சிபாரிசு செய்தார் என்று அவருக்காக ஒரு மலையாளிப் பையனை-மாதம் அறுபது ரூபாய் சம்பளம் பேசி என் கடையில் எனக்கு உதவியாகச் சிறு போர்டுகள் டிசைன்கள் எழுத அமர்த்திக் கொண்டேன். அவனுக்குத் தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/502&oldid=595755" இலிருந்து மீள்விக்கப்பட்டது