பக்கம்:பொன் விலங்கு.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 505

திரும்பிப் புறப்பட்டு விட்டார் கல்லூரி முதல்வர். சத்தியமூர்த்தியும் அவர்களோடு புறப்பட்டு விட்டான். அந்த வீட்டின் கடைசிப் படியிலிருந்து அவன் திரும்பிப் பார்த்துத் தன் கண்களின் பார்வையையும் உட்புறம் திருப்பியபோது கதவருகே அவனையே பார்த்தபடி பாரதி கண்கலங்க நின்றிருந்தாள். ஒருகணம் தயங்கி விட்டுக் கூட்டத்தோடு கூட்டமாக விரைந்து நடந்தான் அவன். ஆனால் அவனுடைய மனம் மட்டும் இன்னும் ஒருகணம் அதிகமாக அங்கே தயங்கியது.

"ஏன் சார்! உங்களைத்தானே? உங்களுக்கு இந்த விவரம் நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டுமே? பாரதிக்குத் திருமணமாகி, அவள் கணவன் வீடு போகிறவரை-பூபதியின் சொத்துகளுக்கும், பெண்ணுக்கும் ஜமீன்தார்தான் கார்டியனாமே? நிஜம்தானா அது?’ என்று சத்தியமூர்த்தியை விசாரித்தார் வம்பளப்பதில் ஆர்வம் உள்ள ஒரு பேராசிரியர் 'தனக்கு அந்த விவரம் ஒன்றும் தெரியாதென்று அவருக்கு அடக்கமாக மறுமொழி கூறினாள் அவன். “இத்தனை வயசுக்கு மேலே இந்த ஜமீன்தார் யாரோ ஒரு நாட்டியக்காரியிடம் மனத்தைப் பறிகொடுத்திருக்கிறாராமே! இது தெரியுமா உங்களுக்கு?' என்று அதே வம்புக்காரப் பேராசிரியர். இன்னொருவரிடம் சொல்லிக்கொண்டு சென்றபோது சத்தியமூர்த்தி உடனே அருகில் ஓடிப்போய் அவரைக் கன்னத்தில் அறைய வேண்டும் போலப் பொறுமை இழந்திருந்தான். ஆனால், அவன் தன் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று.

46

米。 கெட்டவர்களை வெளிப்படையாகப் பகைத்துக் கொள்வதும், நல்லவர்களை வெளிப்படையாக ஆதரிப்பதும் கூடச் சில சமயங்களில் அப்படிச் செய் கிறவனுக்குத் தொல்லைகளை உண்டாக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/507&oldid=595760" இலிருந்து மீள்விக்கப்பட்டது