பக்கம்:பொன் விலங்கு.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 ചെr് വിസ്ക്ര

மறுதினம் மாலையில் கல்லூரி அலுவலகத்தில் வைத்தே நிர்வாகக் குழுவின் அவரசக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகக் குழுவினர் கல்லூரி நிர்வாகத்தின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தும் புதிய தலைவர்-ஆசிரியர்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு துறை ஆசிரியர்களும் புதிய தலைவருக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கல்லூரி முதல்வர் அன்று மாலையில் வகுப்புகள் முடிந்த பின்பும் ஆசிரியர்களை வீட்டுக்குப் போகவிடாமல் தடுத்து நிறுத்தி விட்டார். கல்லூரி நிர்வாகக் குழுவின் கூட்டம் மிகவும் சுருக்கமாக அரைமணி நேரத்தில் முடிந்துவிட்டது. ஏற்கெனவே பலமான வதந்தி இருந்தது போலவும், பலர் எதிர்பார்த்துப் பேசிக்கொண்டது போலவும் மஞ்சள்பட்டி ஜமீன்தாரே கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். எதிர்பார்த்திருந்த உண்மைதான் அது ஆனால், அதே உண்மை நிச்சயமாகவும் உறுதியாகவும் ஆகிவிட்டபோது சத்திய மூர்த்திக்குக் கவலையையும் கசப்பையும் உண்டாக்கிவிட்டது.

சம்பிரதாயப்படி ஆசிரியர்கள் புதிய தலைவருக்கு மாலை சூட்டித் தேநீர் விருந்தளிக்க வேண்டும். அடுத்த ஹாலில் தேநீர் விருந்துக்கும் கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் தயாராக இருந்தன.

மறைந்தவருக்கு இரங்கற் கூட்டம் நடந்து ஒரு வாரம் கூடக் கழியவில்லை! அதற்குள் புதிதாக வந்துவிட்ட தலைவருக்குப் பாராட்டுக் கூட்டமும் மாலையும் விருந்தும் தயாராகிவிட்டன. அப்பப்பா இந்த உலகத்துக்குத்தான் எத்தனை அவசரம்? வருத்தப்பட்டு இரங்குவதிலும் அவசரம்தான் சந்தோஷப்பட்டுக் கொண்டாடுவதிலும் கூட அவசரம்தான் வருத்தத்தையும் பரபரப்பாகக் கொண்டாடிமுடித்துவிடுகிறார்கள். சந்தோஷத்தையும் பரபரப்பாகக் கொண்டாடி முடித்து விடுகிறார்கள்.

தேநீர் விருந்து முடிந்ததும் முதலில் பிரின்ஸிபால், ஜமீன்தார் கல்லூரி நிர்வாகக் குழுவின்தலைவராகவந்ததைப் பாராட்டிப்பேசி, அவருக்கு மிகப் பெரிய மாலை சூட்டினார். அடுத்து இங்கிலீஷ் டிபார்ட்மென்ட் சார்பில் மாலை சூட்டினார்கள். அடுத்து வார்டன் ஆகிய துணை முதல்வர் மாலை சூட்டினார். இதற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/508&oldid=595761" இலிருந்து மீள்விக்கப்பட்டது