பக்கம்:பொன் விலங்கு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 49

இதன் வழியாகப் போனால் ஆண்கள் தங்கியிருக்கும் விடுதி. ஹாஸ்டல் ஏற்பாடுகள் எல்லாம் இங்கு மிகவும் கண்டிப்பானவை. அதோ நட்ட நடுவில் பிரம்மாண்டமான வாயிலோடு தெரிகிறதே அதுதான் காலேஜ் லைப்ரரி.

அதற்கு அடுத்த கட்டிடம் கல்லூரி விழாக்கள் எல்லாம் நடைபெறுகிற ஆடிட்டோரியம். பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் இந்த மாதம் முதல்தேதி வெளியாகிற புதுப் புத்தகம் இந்த மாதக் கடைசி வாரத்துக்குள் இங்கே நூல் நிலையத்தில் படிக்கக் கிடைக்கும். தமிழிலும், பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் வடமொழியிலுமாக ஏறக்குறைய இரண்டு இலட்சம் முக்கியமான நூல்கள் இந்த நூல் நிலையத்தில் உண்டு!"

'கல்லூரி என்றுதான் இதைச் சொல்கிறீர்கள்! ஆனால் ஒரு மாபெரும் பல்கலைக்கழகத்திற்குரிய அத்தனை வசதிகளும் இங்கே இருப்பதாகத் தெரிகிறது'-என்று சத்தியமூர்த்தி மிகவும் சுருக்கமாக ஆனால் வலுவுள்ள நல்ல வார்த்தைகளில் அவளிடம் அதைப் பற்றிப் புகழ்ந்தான். -

'பிற்காலத்தில் இது ஒரு பல்கலைக்கழகமாக வளர வேண்டும் என்று அப்பாவுக்கே அந்தரங்கமான ஓர் ஆசை உண்டு."

'இரண்டு கோடியாக இருக்கிற பாங்குக் கணக்கை மூன்று கோடியாக வளர்ப்பதற்கு என்ன வழி என்று மேலும் மேலும் சேர்த்துக் குவிக்க ஆசைப்படுகிற பணக்காரர்களைத்தான் பொதுவாழ்வில் அதிகமாகப் பார்க்கிறோம். உங்கள் தந்தை பணக்காரர்களில் ஓர் அபூர்வமான மனிதராயிருக்கிறார்.

இதைக் கேட்டுப்பதில் சொல்லாமல் சிரித்தாள் அவள். அந்தக் கல்லூரியின் பல்வகைச்சிறப்புக்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்து முடித்தபோது தான் எப்படியும் அங்கு வந்து விடவேண்டுமென்ற எண்ணமே சத்தியமூர்த்தியின் மனத்தில் நிச்சயிக்கப்பட்டது.

பஸ் ஸ்டாண்டில் ஏறுவதற்கு முன் மல்லிகைப் பந்தலைப் பற்றிய எல்லா ஞாபகங்களையும் ஒன்று சேர்த்து எண்ணி அவற்றில் மிக முக்கியமான ஒன்றை மனத்தின் ஆழத்தில் பதித்துக் கொள்ள விரும்பினான் சத்தியமூர்த்தி. தான் உறுதியாய் அங்கே வந்துவிட

பொ. வி - 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/51&oldid=595763" இலிருந்து மீள்விக்கப்பட்டது