பக்கம்:பொன் விலங்கு.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 509

அகிம்சை என்ற பேரிலோ, சாந்தம் என்ற பேரிலோ, தீமையை அங்கீகரிக்கவோ, மன்னிக்கவோ, பொறுத்துக் கொள்ளவோ செய்வதை அவனால் ஒரு சிறிதும் ஒப்புக்கொள்ள முடிவதில்லை. எருமை மாட்டின் முதுகில் மழை பெய்தாற்போல் தீமைகளையும் கொடுமைகளையும் உணரவோ, எதிர்க்கவோ தெம்பும் தைரியமும் இல்லாமல் பட்டும் படாமலும் வாழ்கிற பரவலான பெரும்பான்மை நாகரிகத்தைக் கடுமையாக வெறுக்கும் மனப்பான்மை அவனுள் உருவாகியிருந்தது. கடிவாளமிட்டு கண்கள் மறைக்கப் பெற்ற குதிரை ஓடுவதுபோல் ரூபாய் நோட்டுக்களால் கண்களை மறைத்துக் கொண்டு நல்லது கெட்டதைக் கவனியாமல் ஆசைச் சுமைகளைச் சுமந்து இழுத்து ஓடும் சராசரி மனிதர்களிலே தானும் ஒருவனாக இருந்துவிட அவனால் முடியாது. இந்த நூற்றாண்டில் வாழ்க்கையின் சித்தாந்தமே தனி. நிறைந்த படிப்பையும் பண்பையும் வைத்துக்கொண்டு பலர் திண்டாடும்போது சிறிதளவு சமயோசித புத்தியையும் சூழ்ச்சியையும் வைத்துக்கொண்டேசிலர்நன்றாக வாழ்ந்துவிடுகிற காலம் இது இந்தக் காலத்திலேயே சமயோசித புத்தி இல்லாமல் கூட்டத்தில் ஒருவரை விட்டுக்கொடுத்து வெளிப்படையாகப் பகைத்துக்கொண்டு வெளியே இருக்கிற உன்னைப் போன்றவர்கள் பலசாலிகளின் விரோதிகளா கின்றீர்களே?' என்று தன்னைப் பயமுறுத்தும் போலி மனப் பிராந்தியை எள்ளி நகையாடினான் அவன். நினைத்து நினைத்து வெறுத்தது கடைசியில் நிகழ்ச்சியாகவே நடந்துவிட்டது. ஜமீன்தாரே கல்லூரி நிர்வாகக்குழுவின்தலைவர் என ஒருமனதாகத்தேர்ந்தெடுத்துவிருந்து வைத்து மாலை சூட்டி அந்த வைபவத்தைக் கொண்டாடியும் விட்டார்கள். அந்தக் கசப்பான உண்மையைத் தேநீர் விருந்து வைத்து நிரூபித்தாகிவிட்டது. - -

நன்றாக இருட்டிய பின்பும் எழுந்திருந்து போகத் தோன்றாமல் ஏதேதோ சிந்தித்தபடி ஏரிக்கரையிலேயே உட்கார்ந்திருந்தான் சத்தியமூர்த்தி. மழை வந்துவிட்டது என்பதைப் புரிய வைக்கிறாற்போல் இரண்டொரு தூற்றல் மேலே விழுந்த பின்புதான் அவன் அங்கிருந்து புறப்பட்டான். ஜமீன்தார் மல்லிகைப் பந்தல் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராகி விட்டார் என்ற செய்தி அதற்குள் ஊர் முழுவதும் பரவியிருந்தது. மழையில் நனைந்து விடாமல் இருப்பதற்காக அவசரமாக அறையை நோக்கி நடக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/511&oldid=595765" இலிருந்து மீள்விக்கப்பட்டது