பக்கம்:பொன் விலங்கு.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510 பொன் விலங்கு

தொடங்கியிருந்த சத்தியமூர்த்தியை நடுவழியில் அவனைப் போலவே அவசரமாக எதிரே வந்துகொண்டிருந்த சில மாணவர்கள் சந்தித்தார்கள். அந்த அவசரத்திலும் கூடத்துக்கம் விசாரிப்பதுபோல் அவர்கள் அவனிடம் விசாரித்த சேதி, ஜமீன்தார் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராகி விட்டாராமே' என்பதுதான். சத்தியமூர்த்தியின் மனப்பான்மையை நன்கு புரிந்து கொண்ட மாணவர்களாகையால் இந்தப் புதிய நிர்வாகத் தலைமையினால் அவனும் மனம் வருந்தியிருப்பான் என்று எதிர்பார்த்தே விசாரிப்பது போலிருந்தது அந்த மாணவர்களின் சொற்கள். மல்லிகைப் பந்தல் கல்லூரியின் மாணவர்களிடம் உண்டாகியிருந்த புத்துணர்ச்சிக்கும் சுறுசுறுப்புக்கும் இலட்சியக் கட்டுப்பாடுகளுக்கும் சத்தியமூர்த்தி நெருங்கிய காரணமாகவும் தலைவனாகவும் இருந்ததனால், பெரும்பாலான மாணவர்கள் அவனை ஒரு நம்பிக்கையாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். புதிய தலைவர் பற்றிய விசாரிப்பை மாணவர்களும் வருத்தத்தோடு விசாரித்துப் போனபின் லேக் அவென்யூவுக்குப் போய் அறையை அடைகிறவரை அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டு போனான் அவன். மழையினால் கடையைச் சீக்கிரமே பூட்டிக்கொண்டு வந்திருந்த குமரப்பனும் தேநீர்விருந்து முடிந்து கல்லூரியிலிருந்து நேரே திரும்பியிருந்த தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் கூட அப்போது தங்களுக்குள் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள் என்பது உள்ளே நுழைந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே சத்தியமூர்த்திக்குத் தெரிந்தது. சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் பேச்சைநிறுத்திவிட்டு, "என்னப்பா? துரதிர்ஷ்டம் தேநீர் விருந்தோடு ஆரம்பமாகியிருப்பதாகக் கேள்விப்பட்டேனே, நிஜம்தானா?" என்று கேட்டான் குமரப்பன். "ஆமாம்' என்று சுருக்கமாகப் பதில் வந்தது சத்தியமூர்த்தியிடமிருந்து. . - "என்ன சார் இது? திடீரென்று இருந்தாற்போலிருந்து அப்படி எழுந்து போய்விட்டீர்கள்? பிரின்ஸிபாலுக்கு உங்கள்மேல் சொல்ல முடியாத கோபம். கடைசியில் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துக் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவர் என்ற முறையில் ஜமீன்தார் பேசினார்" என்று சுந்தரேசன் விவரிக்கத் தொடங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/512&oldid=595766" இலிருந்து மீள்விக்கப்பட்டது