பக்கம்:பொன் விலங்கு.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 - . பொன் விலங்கு

'அதிருக்கட்டும் சத்தியம் ஜமீன்தார்வாளுடைய சொற் பொழிவில் இன்னொரு குறிப்பும் இருக்கிறது. பணிவையும், மரியாதையையும் பற்றி அவர் ஞாபகப்படுத்திப் பேசியிருக்கிறாரே, அது உனக்காகத்தான். நீ பாதிக் கூட்டத்தில் அலட்சியமாக எழுந்து சென்று விட்டதை மனதில் வைத்துக் கொண்டுதான் அவர் அப்படிப் பேசியிருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது."

"தோன்றுவதாவது ஒன்றாவது? சத்தியமூர்த்திக்காகத்தான் ஜமீன்தார் அப்படிப் பேசியிருக்கிறார் என்று கூட்டம் முடிந்து வெளியேறியபோது ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுக்குள் சொல்லிக்கொண்டு வந்தார்களே?" என்றார் சுந்தரேசன். "நீங்களும் உங்கள் வெறுப்பை அவ்வளவு வெளிப்படையாக அங்கே காண்பித்திருக்க வேண்டாமென்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். கூட்டங்களில் நமக்கு வேண்டாதவர்களைப் புகழ நேரிடுவதும் நம்மால் வெறுக்கப்படுகிறவர்களுக்கு நம் கைகளாலேயே மாலை சூட்ட நேரிடுவதும், இன்றையப் பொது வாழ்வில் தவிர்க்க முடியாத காரியங்கள். நூற்றுக்குத் தொண்ணுறு பாராட்டுக் கூட்டங்கள் அப்படித்தான் நடைபெறுகின்றன. "இரகசியமான பகைமையும், பகிரங்கமான உறவும்தான் இன்றைய வாழ்வில் சாமர்த்தியமாக வாழ்வதற்குக் கருவிகள் என்று இராச தந்திரிகள் மட்டுமல்லாமல் சாதாரணப் பொதுமக்களும்கூடப் புரிந்துகொண்டிருக்கிற காலத்தில் நீங்கள் மட்டும் அதைப் புரிந்துகொள்ளத் தவறியிருப்பது வருந்தத்தக்கது" என்று சுந்தரேசனே மனப்பூர்வமான அநுதாபத்தோடு மேலும் கூறினார். சத்தியமூர்த்தி இதைக் கேட்டு மறுமொழி ஒன்றும் கூறவில்லை. நண்பர்களுக்குள் இந்த விவாதம் அன்று மாலை இவ்வளவில் முடிந்துவிட்டது. மூவரும் சேர்ந்து இரவு உணவுக்குப் போய்விட்டு வந்தார்கள். தூங்குவதற்கு முன் அவர்கள் பேசிக் கொண்டிருந்த விஷயம் அன்றைய காலைத் தினசரிப்பத்திரிகைகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்து போய் விட்டாரா இல்லையா? என்பதைப் பற்றி விசாரணைக் குழுவினர் கூறியிருந்த சில கருத்துகளைப் பற்றியதாயிருந்தது. சத்தியமூர்த்திக்கும் குமரப் புனுக்கும் சுபாஷ் போஸ் என்றால் உயிர். "பிரதேசங்களை இழப்பதும்தோற்பதும்கூடஒரு தேசத்துக்குப் பெரிய நஷ்டம் இல்லை. சுபாஷ் போஸைப் போல் உணர்ச்சி மிக்க ஒரு தலைவனை இழப்பதுதான் பெரிய நஷ்டம்' என்று குமரப்பன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/514&oldid=595768" இலிருந்து மீள்விக்கப்பட்டது