பக்கம்:பொன் விலங்கு.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 513

போஸைப் பற்றிப் பேசும்போதெல்லாம் வாய்க்கு வாய் கூறுவான். எதற்கும் அலட்சியமாகச் சிரித்துவிடத் தெரிந்த அந்தத் துணிவு மிக்க கார்ட்டூனிஸ்ட் போஸைப் பற்றிப் பேசும்போது மட்டும் நெகிழ்ந்து கண் கலங்கி விடுவிான். - -

'இராணுவ ஞானமும் தேசத்துக்காகக் கொதிக்கிற பரந்த தன்மானமும் உள்ள ஒரு பெரிய தலைவன் எந்தச்சமயத்தில் இந்தத் தேசத்துக்குத் தேவையோ அந்தச் சமயத்தில் இல்லாமற் போய்விட்டது நம்முடைய துரதிர்ஷ்டம்" என்று சத்தியமூர்த்தியும், குமரப்பனும் தங்களுக்குள் அடிக்கடி போஸைப் பற்றிப் பெருமையாகக் கூறிக் கொள்வார்கள். 'ஃபாதர் ஆஃப் இந்தியன் ரெவல்யூஷன் (இந்தியப் புரட்சியின் தந்தை) என்று போஸைப் பற்றி ஒர் அறிஞர் கூறியிருப்பதை சத்தியமூர்த்தி தன் சொற்பொழிவு களில் மாணவர்களுக்கு எடுத்துக் கூறுவதும் உண்டு. அன்றிரவு பேசிக் கொண்டிருந்தபோது சுந்தரேசன் மட்டும் இந்தக் கருத்தை ஒப்புக்கொள்ளத் தயங்கினாற் போலச் சிறிது மாறுபட்டார். "மேடைகளில் பேசுவதையும். கட்டிடங்களைத் திறந்து வைப்பதையும் தவிர வேறு விதமான செயல் துணிவில்லாத பதவி மோகமுடையவர்களையே இன்று எங்கும் பரவலாகக் காண்கிறோம். போஸைப்போல் ஒரு பிறவி வீரர் நம்மிடையே இப்போது இருப்பாரானால் புதுமைகள் நிகழக் காணலாம்' என்று சத்தியமூர்த்தி சுந்தரேசனுக்கு அழுத்திச் சொன்னான். சுந்தரேசன் வேறு ஏதோ காரணங்களைச் சொல்லி இதை மறுத்துப் பேச முயன்றார். இதே விஷயத்தைப் பற்றியே மேலும் விவாதித்துக் கொண்டிருந்து விட்டு நண்பர்கள் அன்றிரவு உறங்கிவிட்டார்கள்.

மறுநாள் காலை சத்தியமூர்த்தி கல்லூரியில் நுழைந்ததும் மைதானத்திலும் - அலுவலகத்திலும் - ப்ரேயர் கூட்டத்திலும் - ஆசிரியர்கள் அறையிலும்-அங்கங்கே அவனைச் சந்தித்த ஆசிரியர்கள் எல்லோரும் அவனருகே பூகம்பத்தையோ, எரிமலையையோ அவனோடு சேர்த்துப் பார்ப்பதுபோல் பயத்தோடு பார்த்தார்கள். முதல்நாள் தேநீர் விருந்தின்போது எழுந்து வெளியே சென்ற பெருங் குற்றத்துக்காகப் பிரின்ஸிபால் அவனை என்ன செய்யப் போகிறார்?' என்று அறிந்து கொள்ளவும், காணவும் அத்தனை ஆசிரியர்களும் ஆவலாயிருப்பதாகத் தெரிந்தது. ஆனால் சத்தியமூர்த்தியோ வழக்கத்தைவிட அதிகமாக நிமிர்ந்து நடக்க

பொ. வி - 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/515&oldid=595769" இலிருந்து மீள்விக்கப்பட்டது