பக்கம்:பொன் விலங்கு.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 517

ஆணையிடுவதிலும் திருப்திப்படுகிற மனமுள்ளவர்களால் யாரையாவது எதற்காகவாவது ஏவாமலும் ஆணையிடாமலும் சும்மா இருக்கவே முடியாது. பிறரை அடிமைப்படுத்தி மகிழ வேண்டுமென்ற ஆசை மகாமன்னர்களுக்கும், நவாபுகளுக்கும், சுல்தான்களுக்கும் இருந்ததைப் பழைய வரலாறு சொல்கிறது. ஆனால் நம் தலைமுறையில் நம்முடன் வாழும் ஒவ்வொரு மனிதனிடமுமே அவனவனுடைய புத்திக்கும் அகங்காரத்துக்கும் தகுந்தாற்போல் இன்னொருவனை அடக்கி ஆள வேண்டுமென்ற அடிமை வேட்கை (வேட்டை) அந்தரங்கமாக இருக்கிறது. தான் சொல்கிறபடியே இன்னொருவன் சொல்ல வேண்டுமென்றும் தான் செய்கிறபடியே இன்னொருவன் செய்ய வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறதற்கும் அதிகமாகத் தான் சிந்திக்கிறபடியேதான் இன்னொருவனும் சிந்திக்க வேண்டும் என்று கண்டிப்பாய் எதிர்பார்க்கிற சிந்தனை அடிமைத் தனம்-மிகப் பயங்கரமான தொத்து வியாதியாய் இந்தத் தேசம் முழுவதும் பரவிக் கொண்டு வருகிறதே என்றெண்ணி அஞ்சினான் சத்தியமூர்த்தி. மனிதர்களை மதிப்பிலும் அவர்களுடைய தராதரங்களைக் கணிப்பதிலும் சொந்தமாகவோ அல்லது பிறர் நினைக்கிற நினைப்பிலிருந்து மாறுபட்டோ-சிந்திப்பதற்கு எனக்கு உரிமை இல்லை என்று கல்லூரி முதல்வர் எண்ணுகிறாற் போலிருக்கிறது. -

வாழ்க்கையின் நடுவே தன்னுடைய நியாயத்தையும் நேர்மையையும் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த உரிமை மிகமிக அவசியமென்று சத்தியமூர்த்தி கருதினான். மறுநாள் காலையில் பத்து மணிக்குக் கல்லூரிக்குள் நுழைந்ததும் தன்னுடைய மறுமொழிக் கடிதத்தைப் பிரின்ஸிபாலிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டு வரும்படி அதே பழைய ஊழியனிடம் கொடுத்தனுப்பினான் சத்தியமூர்த்தி. அவன் பிரின்ஸிபாலுக்குக்கொடுத்திருந்த மறுமொழிக் கடிதம் விரிவாகவும் மனத்தில் அழுத்தி உறைக்கும்படியாகவும் எழுதப்பட்டிருந்தது.முன்தினம் மாலை ஆறு மணிக்குக்குமரப்பனும், தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் ஏதோ திரைப்படத்துக்குப் போகலாமென்று சத்தியமூர்த்தியை அழைத்தபோது தனக்கு வேலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/519&oldid=595773" இலிருந்து மீள்விக்கப்பட்டது