பக்கம்:பொன் விலங்கு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பொன் விலங்கு

வேண்டுமென்ற ஞாபகம்தான் முதல் ஞாபகமாக அவனுடைய மனத்தின் ஆழத்தில் பதிந்தது. மகிழ்ச்சி பூத்து மலரும் அந்தப் பெண்ணின் கண்கள் இரண்டாவது ஞாபகமாக வந்து பதிந்தன.

பஸ்ஸில் ஏறிக்கொள்ளுமுன் அந்தப் பெண்ணிடம் நிறையச் சொல்லி விடைபெற்றுக் கொண்டான் அவன். அப்போது அவன் வியப்படையும்படியான ஒரு பேச்சை இருந்தாற் போலிருந்து அவள் அவனிடமே தொடங்கினாள். பேச்சு திடீரென்று ஆரம்பமான காரணத்தால் அவள் தன்னிடம் ஞாபகப்படுத்த விரும்புவது என்னவென்பதைப் புரிந்து கொள்ளவே அவனுக்குச் சில விநாடிகள் ஆயின.

"நீங்கள் கூறிய பாடலில் வந்த உவமையின் அழகு இப்போது தான் நன்றாகப் புரிகிறது சார் இதோ இந்தச் செம்மண் பூமியில் மழை பெய்து நீரும் நிலமும் ஒரு நிறமாய்க் கலந்து போயிருப்பதைப் பார்த்தவுடன் இண்டர்வியூவின் போது அப்பாவிடம் நீங்கள் கூறிய பாட்டு நினைவு வருகிறது எனக்கு" என்று இளமுறுவலும் நாணமும் கனிந்து கீழ்நோக்கித்தாழும் முகத்தோடு தரையைப் பார்த்தபடி அவள் சொல்லிக் கொண்டே வந்தபோது சத்தியமூர்த்தி இன்னதென்று விவரித்துச் சொல்ல முடியாததொரு களிப்பில் திளைத்தான். ஈரத்தில் சொதசொதவென்றாகியிருந்த அந்த இடத்தின் செம்மண் பூமியைப் பார்த்தான் அவன். பின்பு அர்த்தமில்லாமல் ஆனால் எதிர்பார்க்கப் படுகிற ஒர் அர்த்தத்தோடு அவள் முகத்தையும் பார்த்தான். மழைக்கு நெகிழ்ந்து கனிந்து போயிருந்த அந்தச் செம்மண் நிலத்தைப்போல அவள்முகத்திலும் கண்களிலும் இதழ்களிலும் கூடஏதோ ஒர் உணர்வு கலந்து கனிந்திருந்தது. அப்படிக் கனிந்திருந்த உணர்வு நாணம் ஒன்று மட்டுமில்லை. நாணமில்லாத வேறொன்றும் தனியாயில்லை. அப்படியிருப்பதே அதைப் புரிந்து கொள்ளும் ஒரே சாதனமாவதைத் தவிர அதைப் புரிந்து கொள்ள வேறு கருவி காரணங்களில்லாத உணர்ச்சிப் புதுமையாயிருந்தது அந்த இனிய அநுபவம். அதை அப்படியே மனதில் ஏற்றுக் கொண்டு பஸ்ஸை நோக்கி நடந்தான் அவன். மழைக்காகப் பஸ்ஸுக்குள் பிரயாணிகள் ஏறிச் செல்லும் வழியில் திரையிட்டிருந்தது. சூட்கேஸும் கையும்ாக பஸ்ஸுக்குள் ஏறி விட்டவனை முழங்கால் வரை திரை மறைத்து விட்ட காரணத்தால் அதற்குக் கீழே திருமணத்தில் நலுங்கு இட்டாற்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/52&oldid=595774" இலிருந்து மீள்விக்கப்பட்டது