பக்கம்:பொன் விலங்கு.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518

பொன் விலங்கு

இருப்பதாகச் சொல்லி அவர்களோடு திரைப்படத்துக்குப் போகாமல் அவர்களை மட்டும் அனுப்பிவிட்டு அறையில் தங்கி அந்தக் கடிதத்தை எழுதியிருந்தான் சத்தியமூர்த்தி.

முதல்வர் அவனை எக்ஸ்பிளநேஷன் கேட்டிருக்கும் செய்தி ஆசிரியர்கள் எல்லாருக்கும் தெரிந்திருந்தது. என்ன காரணத்தினாலோ கல்லூரியின் புதிய நிர்வாகியான மஞ்சள்பட்டியார் சத்தியமூர்த்தியை அறவே வெறுக்கிறார் என்பதும் சில ஆசிரியர்களுக்குத் தெரிந்திருந்தது. அவனோடு நெருங்கி நின்று பேசினாலோ அவனை அணுகி நின்று சிரித்துக்கொண்டிருந்தாலோகூடத்தாங்களும் கல்லூரி முதல்வரின் கடுஞ்சினத்துக்கு ஆளாக நேரிடுமோ என்ற பயத்தினால் வழக்கமாக அவனிடம் கலகலப்பாகப் பேசிப் பழகும் சில ஆசிரியர்கள்கூட இப்போது பேசவும் சிரிக்கவும் பயந்து மெல்ல விலகிச் சென்றார்கள். செய்தி மாணவர்கள் மத்தியிலும் பரவலாகத் தெரிந்திருந்தது.'பிரின்ஸிபாலுக்கும்சத்தியமூர்த்திக்கும் ஏதோதகராறு என்று தெரிந்து கொண்டு அந்தத் தகராறில் நிச்சயமாக நியாயம் சத்தியமூர்த்தியின் பக்கம்தான் இருக்க முடியும் என்பதையும் அங்கீகரித்துக் கொண்டு அவன்மேல் நிறைந்த அனுதாபத்தோடு இருந்தார்கள் மாணவர்கள்.

"நான் கேள்விப்பட்டது மெய்தானா மிஸ்டர் சத்தியமூர்த்தி, நீங்கள் உதவி வார்டன் என்ற பெயருக்கேற்ப எந்த உதவியையும் செய்வதில்லை என்று நீங்கள் நெருங்கிப் பழகியும், சிரித்துக் கலந்து பேசியும் ஹாஸ்டல் மாணவர்களையெல்லாம் வார்டனிடம் பயமோ மரியாதையோ இல்லாமல் செய்து விட்டீர்கள் என்று இப்போது வார்டனாக இருக்கும் வைஸ் பிரின்ஸிபால் உங்களைப் பற்றிப் பிரின்ஸிபாலிடமும், புதிய நிர்வாகியிடமும் புகார் செய்திருக் கிறாராமே? அந்தப்புகாரைக்கேட்டுவிட்டு நீங்கள் உதவி வார்டனாக இருந்து சாதித்து போதும், முதலில் இராஜிநாமாச் செய்துவிட்டு மறுவேலை பாருங்கள் என்று பிரின்ஸிபால் உங்களை இராஜிநாமாச் செய்யும்படிவற்புறுத்துகிறாராமே? உண்மைதானா?" என்று முற்றிலும் புதியதும் சத்தியமூர்த்திக்கே அதுவரை தெரியாததுமான ஒரு விஷயத்தை விசாரித்தார் வாயரட்டையில் கெட்டிக்காரரான பேராசிரியர் ஒருவர். நடந்ததாகத் தெரிந்தவை-இனி நடக்குமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/520&oldid=595775" இலிருந்து மீள்விக்கப்பட்டது