பக்கம்:பொன் விலங்கு.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 பொன் விலங்கு

விரும்பவில்லை. நீங்கள் உடனே 'டி.புடி வார்டன் பதவியை 'உங்களால் பார்க்க முடியவில்லை என்று ரிலைன் (இராஜிநாமா) செய்ய வேண்டும்...!"

"பிரின்ஸிபால் சார்! தயவு செய்து இதற்கு ஒரு சிறு விளக்கம் உங்களிடமிருந்து எனக்கு உடனே தேவை!"

'என்ன விளக்கம்?"

'ரிலைன் செய்வது என்றால் என்ன?"

"புரியாவிட்டால் பச்சைத் தமிழில் தெளிவாகவே சொல்லுகிறேன்? நீங்கள் இராஜிநாமா செய்யவேண்டும்."

"..என்று நீங்கள் என்னை வற்புறுத்துகிறீர்கள் இல்லையா?"

'விதண்டாவாதம் செய்யாதீர்கள்."

"நீங்கள்தான் இதுவரை அதைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். இராஜிநாமா என்று யார் அதைச் செய்கிறானோ அவனே விட்டுவிட விரும்பி அல்லவா செய்ய வேண்டும்? நீங்கள் கூப்பிட்டு மிரட்டுகிறீர்கள் என்பதற்காக அதை நான் எப்படிச் செய்ய முடியும்? வேண்டுமானால் பிரின்ஸிபாலும் கல்லூரி நிர்வாகியும் என்னைக் கூப்பிட்டு மிரட்டுவதால் நான் என்னுடைய 'டி.புடிவார்டன் பதவியை இராஜிநாமாச் செய்கிறேன்' என்று உண்மைக் காரணத்தையும் அதிலேயே எழுதிக் கையெழுத்துப் போடுகிறேன். அல்லது டிபுடி வார்டனாக இருக்கஎந்தெந்தக்காரணங்களால் நான்தகுந்தவன்அல்ல என்பதைக் கூறி என்னை அந்தப் பதவியிலிருந்து நீங்களே தைரியமாக நீக்கி விடுங்கள்."

'நீங்கள் 'டிபுடி வார்டனாக இருந்து ஹாஸ்டலில் எதுவுமே செய்யவில்லை." -

"இது முழுப் பொய்! ஹாஸ்டலில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களைக் கூப்பிட்டு ஓர் இடத்தில் கூட்டம் கூட்டி என்னை முன் நிறுத்தி இந்தக் கேள்வியைக் கேளுங்கள். நான் எதுவும் செய்யவில்லை என்று ஒரு மாணவன் வாய் திறந்தாலும் நான் 'டி.புடி வார்டன் வேலை, லெக்சரர் வேலை எல்லாவற்றையும் விட்டுவிடத் தயார். வார்டனாக இருப்பவர் ஹாஸ்டல் பக்கமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/524&oldid=595779" இலிருந்து மீள்விக்கப்பட்டது