பக்கம்:பொன் விலங்கு.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 523

எட்டிப் பார்ப்பதில்லை. நமக்கென்னடிபுடிவார்டன்தானே? என்று கம்மா இராமல் நான் ஆர்வத்தோடு ஒடியாடிப் பாடுபட்டதற்கு உங்கள் வார்த்தை நல்ல பரிசாக இருக்கிறது சார்! உங்களுக்கு என்மேல் வெறுப்பு இருக்கலாம். அதற்காக என்னைப் பற்றிய உண்மைகளை நீங்கள் மறைப்பது பாவம்.

'சுற்றி வளைத்துப் பேச விரும்பவில்லை மிஸ்டர் சத்திய மூர்த்தி நீங்கள் 'டி.புடி வார்டனாக இருப்பது நம்முடைய புதிய நிர்வாகிக்குப் பிடிக்கவில்லை! இன்னும் வயது முதிர்ந்தவர் யாராவது 'டி.புடி வார்டனாக இருக்க வேண்டுமென்று அவர் ஆசைப் படுகிறார்."

"மிகவும் நல்லது இதே காரணத்தைக் கல்லூரி நோட்டீஸ் போர்டில் எழுதித் தொங்க விட்டு விட்டு நீங்களோ, நிர்வாகியோ என்னை டிபுடி வார்டன் பதவியிலிருந்து வெளியேற்றினால் போகிறது. அதற்காக என்னை இராஜிநாமாச் செய்யும்படி தூண்டுவானேன்? அதிகாரம் உங்களிடம் இருக்கிறது. வெறும் நியாயம்தானே என்னிடம் இருக்கிறது. உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யலாமே?' என்று கூறிவிட்டுப் பிரின்ஸிபால் அறையிலிருந்து அவன் வெளியேறுவதற்காக எழுந்திருந்தபோது எதிரே சுவரில் இருந்த காந்தியடிகளின் படம் அவனுடைய பார்வையைச் சந்தித்தது. - - 'ஏ மகாத்மாவே! உன்னை மகாத்மாவாகப் புரிந்து கொண்டிருக்கிற இந்தத் தேசத்தில் சாதாரண ஆத்மாக்கள் ஒவ்வொன்றும் எப்படி இருக்கின்றன பார்த்தாயா? என்று அந்தப் படத்திற்கு முன்னால் கோவென்று கதறி அழவேண்டும் போல் தோன்றியது அவனுக்கு. அவன் பிரன்ஸிபால் அறையிலிருந்து கோபமாக வெளிறியதை இடை வேளைக்காக மைதானத்தில் கூட்டமாக வெளியேறி நடந்து கொண்டிருந்த மாணவ மாணவிகளும் அப்போது பார்த்தார்கள். அரைமணிநேரத்துக்கெல்லாம்சத்தியமூர்த்தி ஏதோ ஒரு வகுப்பில் இருந்தபோது கல்லூரி ஊழியன் இரண்டாவது முறையாகக் கல்லூரி அலுவலக முத்திரையோடு கூடிய ஒரு தடித்த கடித உறையை அவனிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டுக் கையெழுத்தும் வாங்கிக் கொண்டு சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/525&oldid=595780" இலிருந்து மீள்விக்கப்பட்டது