பக்கம்:பொன் விலங்கு.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:}; சில மாடுகளின் இரத்தத்தை உறிஞ்சு வதற்காக உண்ணி என்ற பூச்சிஅவற்றின் உடலிலேயே ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல் சமூகத்தில் நல்லவர்களின் பொது நலனை உறிஞ்சிக் கெடுக்கும் சில கெட்டவர்களும் மிக அருகிலேயே ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

};

பூபதி உயிரோடிருந்த வரையில் தன்மேல் வெறும்

பொறாமையோடிருந்தவர்கள் எல்லாரும் இப்போது அதை ஓர் எதிர்ப்பாக வெளிப்படையாக மாற்றிக் கொண்டு செயல்படுவது சத்தியமூர்த்திக்குப் புரிந்தது. முதல்வர், துணை முதல்வர், ஹெட்கிளார்க் எல்லோரும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு காரணத்தால் அவனுக்குக்கெடுதல் செய்யக்காத்திருப்பவர்கள்தான். புதிய நிர்வாகியாகிய மஞ்சள்பட்டியாரோ அவனை அறவே வெறுத்து மனம் கொதித்துக் கொண்டிருப்பவர். -

கெடுதல் செய்வதையே பொழுதுபோக்காகக் கொண்டிருப் பவர்களுக்குப் பயந்தும், நயந்தும் அமைவதனால் சமூகத்துக்குப் பொதுவான நன்மை எதுவும் கிடையாது. சில மாடுகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக உண்ணி என்ற பூச்சிகள் அந்த மாடுகளின் உடலிலேயே அட்டை போல் ஒட்டிக் கொண்டிருக்கும். அதைப்போல் சமூகத்தில் உள்ள நல்லவர்களின் பொதுவான நலத்தை உறிஞ்சிக் கொழுப்பதற்குச் சுயநல உண்ணிகளாகிய சில கெட்டவர்களும் மிக அருகில் இருப்பார்கள். அப்படிக்கெட்டவர்கள் மல்லிகைப் பந்தலிலும் இருப்பதைக் கண்டு சத்தியமூர்த்தி வியப்படைந்து விடவில்லை. அவன் கல்லூரி முதல்வரை அவருடைய அறையில் போய்ச் சந்தித்துவிட்டு வந்த அரைமணி நேரத்துக்கெல்லாம் மறுபடி ஊழியன் தேடிவந்து அவனிடம் கொடுத்து விட்டுப்போன உறையில் இரண்டு பெரிய கடிதங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/526&oldid=595781" இலிருந்து மீள்விக்கப்பட்டது