பக்கம்:பொன் விலங்கு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 51

செம்மண் பூசிய கால்களோடு பார்த்தாள் பாரதி. அதைப் பார்த்துவிட்டுப் போவதற்காகத்தான் அவ்வளவு நேரம் காரை நிறுத்திக் காத்துக் கொண்டிருந்தாள் அவள்.

பஸ் புறப்பட்டுப்போய் விட்டது. வீட்டுக்குத் திரும்புவதற்காக காரை ஸ்டார்ட் செய்து திரும்பினாள் அந்தப் பெண். எதிரே மேடாயிருந்த செம்மண் சாலை கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஏதோ மங்கலானதொரு காரியத்துக்காக ஆரத்தி எடுத்துக் கொட்டிய செந்நிறப் பெருக்காய்த் தெரிந்துகொண்டிருந்தது. எதையோ நினைத்துச்சிரிக்கிறவள்போல் தனக்குத்தானேசிரித்துக்கொண்டாள் பாரதி. பின்பு காரில் தலைக்கு நேரேயிருந்த சிறிய கண்ணாடியைத் திருப்பி அதில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். ஆரம்பவரிக்கு மேலே என்னவென்று தெரியாததும் ஆரம்பத்தை மட்டுமே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருந்தால் கூட மகிழ்ச்சி தரக் கூடியதுமான பாட்டு ஒன்று அவள் இதழ்களில் இழைந்து இசைத்து ஒலித்தது. அந்த ஒலி அவள் நாவில் பிறந்து அவள் இதழ்களில் ஒலித்தாலும் அவளே விரும்பி அநுபவிக்கும் இனிமையை அதிலிருந்து தனியே பிரித்து உணர முடிந்தது. காரணம்...? அந்த ஒலிதான் அவளுக்குச் சொந்தம். அதிலிருந்து பிரிந்த இனிமை என்னவோ, இன்னொருவருடைய ஞாபகத்தால் விளைந்ததுதான். ஓர் ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு மழையில் இறங்கி நனையலாம் போலக் குறும்புத்தனமான ஆசை ஒன்றும் அப்போது அவள் மனத்தில் உள்றியது. நனைந்த கோலத்தில் போனால் அப்பாவின் கேள்விக்கு என்ன பதில் கூறமுடியும் என்ற பயம் தடுத்திராவிட்டால் சிறிது நேரம் நனைந்துவிட்டு அப்புறம் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டிருப்பாள் அவள். தலையில் மல்லிகைப்பூப் புதிதாக மணப்பதுபோலவும் கைகளில் வளைகள் முன்பு ஒலித்த வழக்கமான ஒலியைத் தவிர இன்னும் எதையோ புதிதாகச் சொல்லி ஒலிப்பது போலவும் கண்ணாடி எப்போதும் காண்பிக்கிற முகத்தை மட்டுமே காண்பிக்காமல்,-அந்த முகத்தோடு இன்னும் எதையோ சேர்த்துக் காண்பிப்பது போலவும் புதியனவும் இனியனவும் ஆகிய பிரமைகள் சிலவற்றை அவள் இன்று அடைந்தாள். வீட்டுக்குள் நுழைந்து காரை ஷெட்டில் விட்டுவிட்டுத் தந்தையின் அறைக்குள் சென்றபோது அவரோடு இன்னொருவர் பேசிக் கொண்டிருக்கிற ஒலி கேட்டுப் பாரதி அறை வாயிலில் வராந்தாவிலேயே தயங்கி நின்றாள். உள்ளேயிருந்து காதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/53&oldid=595785" இலிருந்து மீள்விக்கப்பட்டது